வானத்தில்
வட்டமடிக்கும்
வண்ணப் பறவைகளைப் பார்!
கூரிய கண்ணும்
விரிந்த சிறகுமாக
நிலத்தை அளப்பதாய்
நீயெண்ணிடினும்…
மேகம் துரத்தி
வானம் திருத்தி
அழகுறச் செய்வதாய்
நீயெண்ணிடினும்…
நான் காண்பதென்னவோ
நீயெண்ணுவதல்லவே!
அதோ!
பறந்து பறந்து
பரிதவித்துத் தேடுகிறது…
இன்னொரு மகாகவியைத் தேடுகிறதோ….
அந்த
பாரதியின் மீசைகளாய்.!