விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள பேர் நாயக்கன் பட்டி, வெற்றிலை யூரணி, சுப்பிரமணியபுரம், வெம்பக்கோட்டை ,குகன் பாறை, உப்பு பட்டி, நதிக்குடி, உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதியில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக கண்மாய்களுக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது.

இதனால் விவசாய பணிகள் தீவிரம் அடைந்து வருகிறது. காயல்குடி ஆற்றில் தொடர்ந்து நீர்வரத்து அதிகம் காரணமாக நிலத்தடி நீர் மட்டம் அதிகரித்து வருவதால் பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர். கடந்த 11 மாதங்களுக்கு பிறகு வைப்பாற்றில் நீர்வரத்து அதிகரித்ததால் நேற்று முன்தினம் வரை வெம்பக்கோட்டை அணையில் ஒரு மீட்டர் மட்டுமே நீர்மட்டம் இருந்த நிலையில் தற்போது நேற்று ஒரே நாளில் ஏழு அடியாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது.

மேலும் நீர் பிடிப்பு பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அணைக்கும் தொடர்ந்து தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. மழைக்காலம் தீவிரம் அடைந்து வருவதால் வெம்பக்கோட்டை அணை இந்த ஆண்டும் நிரம்ப வாய்ப்பு உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.





