• Sat. Apr 18th, 2026
WhatsAppImage2026-04-16at222113
previous arrow
next arrow
Read Now

காவலர்களுக்கு மருத்துவ பரிசோதனை

ByM.maniraj

May 17, 2022

தமிழகம் முழுதும் அரசு அலுவலகங்களில் பணியாற்றும் அதிகாரிகள் மற்றும் பணியாளர்களுக்கு மகளிர் நல மேம்பாட்டு நிறுவனம் சார்பில் பணியாளர்களுக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக மக்களை தேடி மருத்துவம் என்ற முறையில் தமிழகம் முழுவதும் மருத்துவ பரிசோதனை அனைத்து அலுவலகங்களிலும் சிறப்பாக செயல்பட்டு கொண்டு வருகிறது. தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை காவல் நிலையத்தில் அரசு மருத்துவமனை சார்பில் காவலர்களுக்கு இரத்த பரிசோதனை, பிரஷர் மற்றும் சுகர் ஆகியவை கண்டறியப்பட்டு மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டது. தொடர்ந்து பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டது. இதில் கழுகுமலை காவல் நிலைய சப்இன்ஸ்பெக்டர் சதீஷ்குமார், சிறப்பு சப்இன்ஸ்பெக்டர்கள் ராஜ்மோகன், சுப்பாராஜ் மற்றும் காவலர்கள் அனைவரும் மருத்து பரிசோதனை செய்து கொண்டனர். இப்பணியில் மகளிர் நல மேம்பாட்டு நிறுவன பணியாளர்கள் ஈடுபட்டிருந்தனர்.