• Wed. Sep 2nd, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

தமிழக வெற்றிக் கழகத்தின் கழக நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம்..,

ByP.Thangapandi

Jul 18, 2026

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே மெய்யணம்பட்டியில் உள்ள தனியார் மண்டபத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் உசிலம்பட்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கிளைக் கழக நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் தவெக மதுரை புறநகர் மேற்கு மாவட்ட செயலாளரும், உசிலம்பட்டி எம்எல்ஏ-வுமான விஜய் தலைமையில் நடைபெற்றது.,

இந்த கூட்டத்தில் உசிலம்பட்டி, செல்லம்பட்டி, சேடபட்டி ஒன்றியத்திற்குட்பட்ட 100 க்கும் மேற்பட்ட கிளை கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.,

இந்த கூட்டத்தில் பொதுமக்கள் எளிதாக புகார் மனுக்கள் அளிக்கும் வண்ணம் செயலி அறிமுகம் செய்யப்பட்டது., இந்த செயலி கிளைக்கழக நிர்வாகிகள் மூலம் அனைத்து மக்களுக்கும் சென்றடைய வேண்டும் என்றும், பெறப்படும் புகார்கள் மீது விரைந்து நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் எனவும், வரும் உள்ளாட்சி தேர்தலில் அனைத்து ஊராட்சிகளிலும் தவெக வெற்றி பெற உழைக்க வேண்டும் என அறிவுரை வழங்கப்பட்டது.

மேலும் நேற்று சாலை விபத்தில் உயிரிழந்த தவெக நிர்வாகி பாண்டியராஜன் குடும்பத்திற்கு எம்எல்ஏ விஜய் தனது ஒரு மாத சம்பளத்தை நிவாரணமாக வழங்கப்படும் என அறிவித்தார்.,