• Fri. Aug 28th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

10 ஆம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கு ஹால் டிக்கெட் விநியோகம்!

தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை எழுத விரும்பும் தனித்தேர்வர்கள் கடந்த மார்ச் 9 முதல் மார்ச் 16 ஆம் தேதி வரை தேர்வுத்துறை சேவை மையங்கள் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என்று அரசு தேர்வுகள் இயக்கம் முன்னதாக தெரிவித்திருந்தது. இதனைத் தொடர்ந்து, தமிழகத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு விண்ணப்பித்த தனித்தேர்வர்களுக்கான ஹால் டிக்கெட் ஏப்ரல் 20ம் தேதி வெளியிடப்படும் என்று தேர்வுத்துறை அறிவித்தது.

இந்நிலையில்,10-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள தனித்தேர்வர்கள் இன்று பிற்பகல் 2 மணி முதல் இணையதளத்தில் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தேர்வுத்துறை அறிவிப்பு விடுத்துள்ளது. மேலும்,வரும் ஏப்ரல் 27 முதல் ஏப்ரல் 29 வரை நடைபெற உள்ள அறிவியல் பாட செய்முறைத் தேர்வுக்கு ஹால் டிக்கெட் கட்டாயம் எனவும் அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.