கோவை அவினாசி சாலையில், கே.எம்.சி.எச். மருத்துவமனை எதிரே ஹோம்வொர்க்ஸ் இன்டீரியர்ஸ் நிறுவனத்தின் புதிய ஷோரூம் திறப்பு விழா நடைபெற்றது. கோவையில் இந்நிறுவனத்தின் இரண்டாவது ஷோரூமாகவும், முந்தையதைவிட பெரிய அளவிலும் இந்த மையம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த ஷோரூமில் நவீன வீட்டு உள் அலங்காரத்திற்கான பல்வேறு வகையான பொருட்கள் மற்றும் வடிவமைப்புகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக, மாடுலர் சமையலறைகள், படுக்கையறை அலமாரிகள், வரவேற்பறை அலங்காரங்கள், வீட்டிற்குத் தேவையான அறைகலன்கள் மற்றும் வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப வடிவமைக்கப்படும் பிரத்யேக உள் அலங்காரப் பொருட்கள் என அனைத்து வசதிகளும் ஒரே இடத்தில் கிடைக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

வீடுகளின் இடவசதி மற்றும் வாடிக்கையாளர்களின் தேவைக்கேற்ப நவீன வடிவமைப்புகள், தரமான பொருட்கள் மற்றும் அழகிய வேலைப்பாடுகளுடன் உள் அலங்காரத் தீர்வுகளை வழங்குவதே இந்நிறுவனத்தின் நோக்கமாகும். வீடுகளை நவீன முறையில் அலங்கரிக்க விரும்புவோருக்கு இந்தப் புதிய ஷோரூம் பயனுள்ளதாக அமையும் என தெரிவிக்கப்பட்டது.
கோவையைத் தொடர்ந்து டெல்லி, பாட்னா, பெங்களூரு, மதுரை உள்ளிட்ட முக்கிய நகரங்களிலும் தனது கிளைகளை விரிவுபடுத்த ஹோம்வொர்க்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

இதற்கிடையே, கடந்த நவம்பர் 25-ம் தேதி கோவையில் ரூ.315 கோடி முதலீட்டில் அமைக்கப்பட்டுள்ள ஹோம்வொர்க்ஸ் நிறுவனத்தின் நவீன உற்பத்தி ஆலையை தமிழக முதலமைச்சர் சி.ஜோசப் விஜய் திறந்து வைத்தார்.
இந்த ஆலையின் மூலம் சுமார் 830 பேருக்கு வேலைவாய்ப்பு உருவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


