

தமிழ் நாட்டை ஆளும் ஆண் தாய் முதலமைச்சர் மு க ஸ்டாலின் என பிரபல இயக்குனர் சீனு ராமசாமி தெரிவித்துள்ளார்.
பிரபல இயக்குனர் சீனு ராமசாமி இயக்கிய மாமனிதன் மற்றும் இடிமுழக்கம் ஆகிய இரண்டு திரைப்படங்கள் அடுத்தடுத்து வெளியாக உள்ளது. இதனை அடுத்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து இயக்குனர் சீனு ராமசாமி ஆசி பெற்றார்.
பின் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில், ‘எனது திரைப்படங்களை பார்த்து ரசித்து ஆக்கத்தின் பாதையில் செல்ல உந்து சக்தியாக இருக்கும் தமிழ் நாட்டை ஆளும் ஆண் தாய் முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்தேன். மாமனிதர் மற்றும் இடிமுழக்கம் படங்களுக்கு வாழ்த்து பெற்றேன்’ என்றார்.
