• Mon. Aug 24th, 2026
WhatsAppImage2026-08-20at214238
previous arrow
next arrow
Read Now

முல்லைப் பெரியாறு அணை… கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்த ஓ பன்னீர்செல்வம்

Byகாயத்ரி

Apr 18, 2022

தமிழக சட்டப்பேரவை நான்கு நாட்கள் விடுமுறைக்கு பின் இன்று காலை கூடியது. இன்றைய கேள்வி நேரத்தில் முல்லைப் பெரியாறு அணை தொடர்பாக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஓ பன்னீர்செல்வம் உரையாற்றினார். இந்த தீர்மானம் குறித்து ஓபிஎஸ் பேசியதாவது, பேபி அணையில் தமிழக அரசு பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள எந்த தடையும் ஏற்படுத்தக் கூடாது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. ஆனால் தொடர்ந்து இடையூறு செய்து வருகின்றனர். அணையின் முழு அதிகாரமும் தமிழகத்திற்கு தான் இருக்கிறது. மேலும் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் நீர் ஆதாரமாக உள்ள முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த வேண்டும் என கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து அனைத்து கட்சிகளை சேர்ந்த உறுப்பினர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.