புதுக்கோட்டையில் மாற்றுத் திறனாளிகளுக்கு லட்சக்கணக்கான ரூபாய் மதிப்பிலான உபகரணங்களை திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் முகமது பர்வேஸ் வழங்கினார்.

ஜாதி மதம் இனம் தாண்டி நோய் என்பது அனைவருக்கும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய கொடிய தன்மையாகும். அதேபோல் நோய் என்று வந்துவிட்டால் மருத்துவமனைகளிலும் நோய் எதிர்த்துக் கொள்ள வேண்டிய வேறு சில துறைகளிலும் சாதி மதம், இனம் பாராமல் காத்துக் கிடக்க வேண்டிய அவலம் மனித குலத்துக்கு உண்டு. அந்த வகையில் மாற்றுத்திறனாளிகள் என்று சொல்லக்கூடிய உடல் ஊனமுற்றோர், பல உபாதைகளுக்கு உள்ளானோர் ஜாதி மதம் இனம் என்று எதுவும் பாராமல் அனைவரும் மருத்துவ பயனாளிகள் என்கிற வகையில் துறைகளை அணுக வேண்டி இருக்கிறது.

அவ்வாறு அணுகிய வகையில் கடந்த ஐந்து ஆண்டுகளாக மாற்றுத்திறனாளிகளுக்கு என்று கடந்த அரசாங்கம் ஏராளமான உதவிகளை செய்து வந்திருக்கிறது. இப்போது அதன் தொடர்ச்சியாகவும் நீட்சியாகவும் அடுத்தடுத்து அரசுகளும் செய்ய வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு உள்ளாகி இருக்கிறார்கள்.
அதேபோல் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர்கள் நகரங்கள் கிராமங்கள் குக்கிராமங்கள் தெருக்கள் வீதிகள் என்று மாற்றுத்திறனாளிகள் எங்கிருந்தாலும் அவர்களைத் தேடி பிடித்து அவர்களுக்கு செய்ய வேண்டிய அரசின் நலத்திட்ட உதவிகளை விளக்கி செய்து வருகிறார்கள். மாற்றுத்திறனாளிகள் இருப்பதை மட்டும் அடையாளப்படுத்தி விட்டால் போதும் அனைத்து உதவிகளையும் மாற்றுத் திறனாளிகள் நலத்துறை அலுவலர்களும் பணியாளர்களும் உதவிகள் கிடைக்கச் செய்து வருகிறார்கள். அந்த வகையில் அண்மையில் கணக்கெடுக்கப்பட்ட புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் ஏழு பேருக்கு
நான்கு லட்சத்து 600 ரூபாய் மதிப்பிலான செயற்கையாக உருவாக்கப்பட்ட கைகள் மற்றும் கால்கள் வழங்கப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மாவட்ட அலுவலர் சூரியபிரபு ஏற்பாடு செய்திருந்தார்.

இலுப்பூரைச் சேர்ந்த பரமசிவம், மீமி சிலை சேர்ந்த கைருன்னிஷா, சுப்பிரமணியபுரம் கிராமத்தைச் சேர்ந்த விமலா, ஆர் புதுப்பட்டினத்தைச் சேர்ந்த சாகுல் அமீது, கடையக்குடி செபஸ்தியார் புரத்தைச் சேர்ந்த வீரம்மாள், அறந்தாங்கியைச் சேர்ந்த ராமச்சந்திரன். வார்பட்டு கிராமத்தைச் சேர்ந்த வேலுசாமி ஆகியோருக்கு தமிழ்நாடு திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் மாண்புமிகு முகமது பர்வேஸ் செயற்கை கால்கள் கைகளை வழங்கி சிறப்பித்தார்.
புதுக்கோட்டை நகர் மன்றம் வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்விற்கு மாவட்ட வருவாய் அலுவலர் குழந்தைசாமி தலைமை வகித்தார். முன்னாள் அமைச்சர் டாக்டர் சி விஜயபாஸ்கர், தொழிலாளர் நலத்துறை ஆணையர் கார்த்திகேயன், ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்வுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மாவட்ட அலுவலர் சூரியபிரபு செய்திருந்தார்.




