புதுக்கோட்டை திலகர் கடலில் தமிழக வெற்றிக்கழக மத்திய மாவட்டம் சார்பில் 100 நாட்கள் சாதனை விளக்கம் பொதுக்கூட்டம் நடைபெற்றது இதில் தமிழக தொழிலாளர் நலன் மற்றும் இதன் மேம்பாட்டு துறை அமைச்சர் முகமது பர்வேஸ் மற்றும் முன்னாள் அமைச்சரும் தமிழக வெற்றிக்கழக புதுக்கோட்டை மாவட்ட அமைப்புச் செயலாளருமான விஜயபாஸ்கர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.
விஜயபாஸ்கர் பேசுகையில்,

போராடி கிடைத்த வெற்றி தான் நிலைத்து நிற்கும் எளிதான கிடைத்த வெற்றி நிலைத்து நிற்காது ஏற்கனவே வலிமையோடு இருக்கும் தமிழக வெற்றி கழகத்தை மேலும் வலுப்படுத்துவதற்கு அதிமுகவிலிருந்து நான் உட்பட பலர் வந்துள்ளோம்
இந்தியாவிலேயே கட்சி தொடங்கிய இரண்டரை ஆண்டுகளில் ஆட்சியைப் பிடித்த ஒரே கட்சி தமிழக வெற்றி கழகமும் முதலமைச்சர் விஜய் தான்.

பெண்கள் குழந்தைகள் உள்ளிட்டவர்களுக்கு பிடிக்கின்ற தலைவராக மாற்றத்திற்கான தலைவராக தமிழக முதல்வர் உள்ளார். தென்னிந்தியா முழுவதும் மக்களுடைய அன்பை பெற்று இருக்கிற ஒரே தலைவர் தமிழக முதலாக உள்ளார்.
மறைந்த தமிழக முதல்வர் நாங்கள் எல்லாம் தெய்வமாகக் கொண்டாட கூடிய ஜெயலலிதாவின் திட்டங்களையும் தம் முதல்வர் செயல்படுத்தி வருவது பாராட்டுக்குரியது.
100 நாட்களில் பல்வேறு சாதனைகளை முதல்வர் படைத்துள்ளார். அள்ளிக் கொடுக்கக்கூடிய ஆட்சியாக தமிழக வெற்றிக்கான ஆட்சி திகழ்ந்து வருகிறது.
ஏழு மாவட்ட விவசாயிகளின் கனவு திட்டமான காவேரி வைகை குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு கடந்த ஐந்து ஆண்டுகளில் எந்த நிதியில் ஒதுக்கப்படவில்லை. ஆனால் இந்த ஆட்சி பொறுப்பு ஏற்றுவுடன் இந்த நிதிநிலை அறிக்கையில் 150 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி விவசாயிகளை மகிழ்ச்சி கடலில் வாழ்த்தியுள்ளார்.
சட்டசபை நிகழ்ச்சிகளை நேரடி ஒளிபரப்பு செய்து வருவது அனைவரின் பாராட்டை பெற்றுள்ளது இது மிகப்பெரிய சாதனை.
சட்டசபையில் எப்படி எல்லாம் நடந்து கொள்ளக் கூடாதோ அப்படி நடந்து கொள்ளும் திராவிட முன்னேற்றக் கழக எம்எல்ஏக்கள் நடந்து கொள்வதை மக்கள் நேரடி ஒளிபரப்பில் பார்த்து வருகின்றனர்.
இந்த ஆட்சி கரை படியாத ஆட்சியாக செயல்பட்டு வருகிறது.
தமிழகத்தில் இனி எந்த தேர்தல் வந்தாலும் தமிழக வெற்றிக்கழகம் தான் வெற்றி பெறும்

நாடாளுமன்றம் சட்டமன்றம் கூட்டுறவு தேர்தல் அனைவரும் எதிர்பார்க்கும் இடைத்தேர்தலாக இருந்தாலும் சரி தமிழக வெற்றிக்கான வெற்றி பெறும்.
எந்தக் கட்சியிலும் இல்லாத ஒன்று தமிழக வெற்றிக் கழகத்தில் உள்ளது கொள்கை தலைவர்களாக ஏற்றுக் கொண்டவர்களுக்கு மரியாதை செய்யும் நிகழ்வு அனைத்து கூட்டங்களிலும் நடத்தி வருவதும் கொள்கை பாடல்களை பாடி மரியாதை செலுத்தும் நிகழ்வு மக்கள் மனதில் இடம்பெற்றுள்ளது என்னுடைய அரசியல் வாழ்க்கை எந்த கட்சிகளும் இது கிடையாது.
தமிழக தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் முகமது பர்வேஸ் பேசுகையில்,
200 யூனிட் மின்சாரம் சிங்கப்பெண் அதிரடிப்படை போதை பொருள் ஒழிப்பதற்கு தனி இலாகா விவசாயிகளுக்கு பயிர் கடன் தள்ளுபடி 717 மதுபான சில்லறை கடைகளை மூடியது மேகதாது அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டமன்றத்தில் தீர்மானம்
உள்ளிட்ட பல சாதனைகள் செய்துள்ளோம்.
தமிழக வெற்றி கழகத்தில் புதிதாக இணைந்துள்ள அதிமுகவினரோடு நாம் இணைந்து பணியாற்றி இனிவரும் எந்த தேர்தலிலும் அனைத்து இடங்களிலும் தமிழக வெற்றி கழகம் வெற்றி பெற அனைவரும் இணைந்து பணியாற்றி வெற்றி பெறுவோம்.
இனி விசில் புரட்சி ஏற்படட்டும்
இது உங்களுடைய ஆட்சி
சட்டசபை நிகழ்வுகளை நேரடி ஒளிபரப்பு செய்வதற்கு தனி தைரியம் வேண்டும் எங்களுக்கு அது உண்டு நேரலை ஒளிபரப்பை கண்டு எதிர்க்கட்சிக்காரர்கள் பயப்படுகின்றனர்.
நமக்கு மேல் ஒரு சக்தி உள்ளது அது நம்மை வழி நடத்துகிறது நாம் உழைப்போம் உள்ளாட்சியில் 100க்கு 100 நாள் வெற்றி பெற வேண்டும் பல்வேறு எதிர்ப்புகளுக்கு பிறகு தான் நாம் வெற்றி பெற்று இங்கு நின்று கொண்டுள்ளோம்
பொதுமக்களோடு கலந்துரையாடி மக்களின் மனநிலை குறித்து அறிந்து கொள்ள வேண்டும் அப்போதுதான் உள்ளாட்சித் தேர்தலில் நாம் வெற்றி பெற முடியும்
இவ்வாறு இருவரும் பேசினர்.




