• Sun. Aug 23rd, 2026
WhatsAppImage2026-08-20at214238
previous arrow
next arrow
Read Now

இந்த 100 நாட்களின் தவெக அரசின் வெளிப்படைத்தன்மைக்கும் அரசுக்கும் இடைவெளி ஏற்பட்டுள்ளது- ஆர்.பி. உதயகுமார்..,

ByKalamegam Viswanathan

Aug 23, 2026

தவெக தேர்தல் 384 மேல் தேர்தல் வாக்குறுதிகளை மக்களுக்கு அளித்தது மக்களும் ஆவலோடு காத்திருக்கிறார்கள்.

மகளிர்க்கு ரூபாய் 2500 வழங்குவோம் என்று கூறினார்கள் ஆனால் அந்த திட்டத்திற்கு 30 ஆயிரம் கோடி தேவைப்படுகிறது என பொருளாதார வல்லநர்கள்கூறுகிறார்கள்
ஆண்டுக்கு 6 சிலிண்டர் வழங்குவோம் என்று சொன்ன அந்த திட்டம் கிடப்பில் உள்ளது. வேலையில்லா பட்டதாரிகளுக்கு 4000 ரூபாய் வழங்குவோம் என்று சொன்ன திட்டமும், அதே போன்று மாநில முழுவதும் அனைத்து பேருத்துகளிலும் மகளிர் கட்டணம் இல்லா பேருந்து என்கிற அந்தத் திட்டமும், பதவியேற்ற அடுத்த நாளில் இந்த திட்டங்கள் எல்லாம் உங்கள் கைக்கு வந்து சேரும், மக்களுக்கு என்று உறுதி அளித்தார்கள்.

ஆனால் இதில் அத்திப்பூத்தார் போல தவெக அரசின் தாய்மாமன் திட்டத்தில், அரசு மருத்துவமனைகளில் ஜூன் 22 ஆம் தேதி முதல் பிறந்த ஒவ்வொரு குழந்தைகளையும், தாய்யையும் கௌரவிக்கும் விதமாக தங்க மோதிரம் வழங்கப்பட உள்ளது என்று அறிவித்தது தவெக அரசு.

ஒரு கிராம் எடையுள்ள 4,41,677 தங்க மோதிரங்கள் வழங்க அரசாணை வழங்கப்பட்டுள்ளதை நாம் அறிவோம். ஜூலை 14 ம் தேதி தமிழக மருத்துவ பணியின் கழகத்தால் ஒப்பந்தபுள்ளி போடப்பட்டது இதுதான் சர்ச்சை ஆரம்பமாகிறது. 11 நிறுவனங்கள் டெண்டர் மூலமாக பங்கேற்று தங்களின் விலைப்புள்ளி விவரத்தை தெரிவித்துள்ளனர் .

அதில் குறைந்த விலை புள்ளியாக வழங்கிய ஜாய் ஆலுக்காஸ் நிறுவனத்தின்.,சகோதர நிறுவனமான ஜோஸ் ஆலுக்காஸின் பிராண்ட் அம்பாசிடராக கடந்த காலங்களில் முதல்வர் விஜய் கதாநாயகனாக, நடிகராக இருந்தபோது பிராண்ட் அம்பாசிட்டராக இருந்துள்ளார்.

இன்றைக்கு நாட்டின் முதல்வராக அவர் உயர்ந்திருக்கிற நேரத்தில் நன்றி கடன் செலுத்துவதற்காக என்ற விதத்தில் இன்றைக்கு ஒரு பைசாவில் 755 கோடி மதிப்புள்ளான டெண்டர்களைஎடுத்து இருக்கிறது ஜோஸ்ஆலுக்காஸின் தாய் நிறுவனமான ஜாய் ஆலுக்காஸ். நிறுவனத்திற்கு பணி செய்ய ஆணை வழங்கப்பட்டுள்ளது.

4 மாதங்களுக்கு தேவையான ஒரு லட்சத்து 28 ஆயிரத்து 499 தங்க மோதிரங்களை பயனாளிகளுக்கு 70 &30 என்ற சதவீதத்தில் ஜாய் ஆலுக்காஸ் நிறுவனம் மற்றும் கல்யாண் ஜூவல்லர்ஸ் நிறுவனத்திற்கு பணி ஆணை வழங்கப்பட்டுள்ள து.

இதில் செய்கூலி, சேதாரம், ஜிஎஸ்டி, போக்குவரத்து ஆகியவற்றின் மதிப்பு ஒரு பைசாவில் உள்ளதாக மதிப்பிடுவதில் விஜய் தலைமையிலான தவெக அரசின் வெளிபடைதன்மை கேள்விக்குறியாக உள்ளது.

ஒருவேளை பிராண்ட் அம்பாசிடராக பணியாற்றிய ஜோஸ் ஆலுக்காஸ் உடைய தாய் நிறுவனமான ஜாய் ஆலுகாஸ்க்கு நன்றி கடன் செலுத்துவதற்கான பணி ஆணையாக இருக்கிறதா? என்று இன்றைக்கு கேள்விகளை தமிழக மக்கள் எடுத்துக் கொண்டு இரக்கிறார்கள்

இது ஒரு புறத்தில் இருக்கிறது என்றால், இந்த நூறு நாட்களில் பணிகள் எல்லாம் முடங்கி கிடக்கிறது. சாலை பணிகள் ,குடிநீர் பணிகள், சாக்கடை பணிகள் எல்லாம் முடங்கி கிடக்கிறது. ஆனால் முதல்வரின் நவீன அறை மாற்றம் என்கிற அந்த அறிவிப்பில் 90 சதவீதம் பணிகள் முடிவடைந்த பின்பு தான் 5.5, கோடிக்கு டெண்டர் கோரப்பட்டு உள்ளது இதனால் வெளிப்புறத் தன்னை கேள்விக்குறியாகி இருக்கிறது.

அதேபோல 1.77 லட்சம் பேருக்கு வழங்க வேண்டிய தைத்திருநாளில் நாளில் இலவச வேட்டிகளை திட்டத்தில் து குறைந்த விலைப்புள்ளி கூறப்பட்டவருக்கு இன்னும் பணி செய்யப்படாமல் அதிகார மையத்திலிருந்து அழுத்தம் வருவதாக பணி தாமதப்படுவதும், தவெக அரசின் வெளிப்படைத்தன்மையை வெட்ட வெளிச்சமாக்கி இருக்கிறது .

விஜய் முதல்வராக பதவியேற்ற போது இந்த நாட்டு மக்களுக்கு வெளிப்படை தன்மைக்கு விஜய் உறுதி அளிக்கிறேன் என்று அவர் வீர முழக்கம் இட்டார் . இந்த 100 நாட்களிலே விஜய் தலைமையிலான தவெக அரசுக்கு இடைவெளி அதிகரித்துக் கொண்டே செல்வதை தவெக அரசின் டெண்டர் நடவடிக்கைக்கான சர்ச்சைகளை சாட்சியாக உள்ளது. ,பணிகள் ரத்து செய்யப்படுகிறது இல்லையென்றால் சர்ச்சையாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது .

இந்த அரசின் அனுபவம் குறைவா, ஆற்றல் குறைவா, அணுகுமுறை குறைவா, அக்கறை இல்லாத குறைவ என்பதுதான் தமிழ்நாட்டு மக்களின் கேள்வியாக உள்ளது.

நிர்வாகம் அனுபவம இல்லதா ஆட்சியாளர்களாக இருக்கிறார்களா, ஆற்றல் இல்லாதவர்களாக இருக்கிறார்களா, மக்கள் மீது அக்கறைகள் இருக்கிறதா, மக்களுக்கும்,ஆட்சியாளர்களுக்கும் தற்போது இடைவெளி அதிகரித்துக் கொண்டே செல்வதை மட்டும் நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது . அரசு இனி வருகிற காலங்களில் இதை சீர்படுத்துமா, செம்மைப்படுத்துமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம் என கூறினார்.