• Sat. Sep 12th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

சாத்தூரில் தமிழக வெற்றி கழகத்தின் 100 நாள் சாதனை பொதுக்கூட்டம்..,

ByK Kaliraj

Aug 24, 2026

சாத்தூரில் தமிழக வெற்றி கழகத்தின் 100 நாள் சாதனை பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் தமிழக வெற்றிக் கழகத்தின் மத்திய மாவட்ட செயலாளர் மற்றும் அதிமுகவில் இருந்து சமீபத்தில் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்த முன்னணி நிர்வாகிகள் உட்பட ஏராளமான தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

மேலும் இந்த பொதுக்கூட்டத்தில் பேசிய அதிமுகவிலிருந்து விலகி தமிழக வெற்றி கழகத்தில் இணைந்த சாத்தூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எம் எஸ் ஆர் ராஜவர்மன் பேசிய போது நடிகராக இருந்த எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா அதேபோல் சினிமா துறையில் இருந்த கருணாநிதியை தமிழக மக்கள் ஏற்றுக் கொண்டார் கள் என்றார்.

மேலும் பேசிய எம் எஸ் ஆர் ராஜ வர்மன் நடிகை திரிஷா சினிமாவில் முன்னணி நடிகை எனவும் புரட்சித்தலைவி ஜெயலலிதா முன்னணி நடிகையாக எப்படி இருந்தார்களோ அதே போல் தற்போது திரிஷா முன்னணி நடிகையாக இருக்கிறார் என்றார்.

மேலும் திரிஷாவை பெண் என்றும் பாராமல் கொச்சைப்படுத்தி பேசுவதும் ஏளனமாக பேசுவதும் திரிஷா குறித்து தரை குறைவாக பேனினால் தமிழக மக்கள் தகுந்த பாடத்தை புகட்டுவார்கள் என்றார்.

மேலும் பேசிய எம் எஸ் ஆர் ராஜவர்மன் புரட்சித்தலைவி ஜெயலலிதாவை ஏளனமாக பேசியதால் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களை எம்.பி யாக டெல்லிக்கு அனுப்பினார் எனவும் அதேபோல் நடிகை திரிஷா தமிழக முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டால் தமிழகத்தில் தமிழக வெற்றி கழகத்தை தவிர வேறு எந்த கட்சி இருக்காது என்றார்.

மேலும் அதிமுக எனும் கட்சியை 100 அடி பள்ளத்தில் புதைத்து விட்டு அம்மாவின் ஆட்சியை கொண்டு வருவோம் எப்படி எடப்பாடி பழனிச்சாமி கூறுகிறார் என முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராஜவர்மன் கேள்வி எழுப்பினார்.

மேலும் தற்போது தமிழகத்தில் புரட்சித்தலைவி மற்றும் புரட்சித் தலைவர் ஆட்சியைத்தான் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் செயல்படுத்திக் கொண்டிருக்கிறார் என பேசினார்.