• Mon. Aug 24th, 2026
WhatsAppImage2026-08-20at214238
previous arrow
next arrow
Read Now

தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு சார்பில் சா.அருணன் வேண்டுகோள்..,

ByKalamegam Viswanathan

Aug 24, 2026

உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி பணியில் இருக்கும் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் கட்டாயம் மூன்று ஆண்டிற்குள் ஆசிரியர் தகுதி தேர்வு எழுதி தேர்ச்சியடைய வேண்டும் என தீர்ப்பு வழங்கியதன் அடிப்படையில் சென்ற ஆட்சியில் அப்போதைய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களின் தலைமையில் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு உள்ளிட்ட அனைத்து சங்க பிரதிநிதிகளுடன் ஆலோசனை கூட்டம் நடந்தது ஒருமித்த கருத்திற்கினங்க சிறப்பு ஆசிரியர் தகுதி தேர்வு நடத்த ஆணை வழங்கப்பட்டது கடந்த ஜூலை மாதம் சிறப்பு தகுதி தேர்வு நடத்தப்பட்டது ஆனால் சிறப்பு தகுதி தேர்வாக இல்லாமல் எப்போதும் போல் வினாக்கள் வேலை தேடுநருக்கு கேட்கப்படும் வினாக்களை காட்டிலும் கடினமாக இருந்த்து

இந்த நிலையில் தான் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மாண்புமிகு ஆ.ராஜ்மோகன் அவர்கள் மீண்டும் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கேட்டமைப்பு உள்ளிட்ட அனைத்து சங்க பிரதிநிதிகளை அழைத்து ஆலோசனை நடத்தினார். சிறப்பு தகுதி தேர்வு எவ்வாறு கடினமாக இருந்தது என்பதை தெரிவித்மோம் அதாவது மொத்த மதிப்பெண்ணில் 40% விழுக்காடு மதுப்பெண் எடுத்தால் தேர்ச்சி என அறிவிக்க வேண்டும் பணிமூப்பு , உயர்க்கல்வி பட்டப்படிப்பிற்கும் 10% விழுக்காடு மதிப்பெண்ணும், கற்பித்தல் திறன் செய்முறைக்கு 10% விழுக்காடு மதிப்பெண்ணும் மற்றும் எழுத்துத்தேர்விற்கு 20% விழுக்காடு என 40% விழுக்காடு மதிப்பெண் எடுத்தால் போதுமானதாக அறிவித்து அனைவரையும் தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிப்பு செய்ய வேண்டும் என தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு சார்பில் கேட்டுக்கொண்டோம் இந்த கோரிக்கை ஏற்று அறிவிப்பு செய்ய வேண்டும்.

22 ஆண்டுகளாக சுமார் 20 ஆயிரம் இடைநிலை ஆசிரியர்கள் சம வேலைக்கு சம ஊதியம் கேட்டு போராடி வருகிறார்கள் நியாயமான கோரிக்கை ஏற்று ஊதிய முரண்பாட்டை சரி செய்யவேண்டும். போராடிய 27 நாட்களை ஈட்டிய விடுப்பாக கருதி ஊதியம் வழங்க வேண்டும்.

20 ஆண்டுகளாக பகுதிநேர சிறப்பாசிரியர்கள் ரூ 15 ஆயிரம் மாத ஊதியத்தில் பணியாற்றி வருகின்றனர். அவர்கள் அனைவரையும் காலமுறை ஊதியத்தில் கொண்டுவர வேண்டும் இனி காலியாக உள்ள சிறப்பாசிரியர்கள் பணியிடங்கள் அனைத்து இவர்களுக்கே முன்னுரிமை வழங்கி பணிவழங்க வேண்டும். , காலமுறை ஊதியத்தில் அமர்த்தும் வரை முழு நேர ஆசிரியர்களாக அறிவித்து மாதம் ரூ. 25,000 வழங்க வேண்டும்.

ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மதியம் உணவு வழங்கப்பட்டு வருகிறது. இதில் 30% விழுக்காடு மாணவர்கள் கூட மதிய உணவு சாப்பிடுவது இல்லை வீட்டில் இருந்து எடுத்துவரும் உணவையே சாப்பிடுகின்றனர் இதற்கு காரணம் அரிசியின் தரம் காரணம் ஆதலால் தரமான அரிசியை கொண்டு சமைத்தால் மட்டுமே 100% விழுக்காடு மாணவர்கள் மதிய உணவை சாப்பிடுவார்கள் தரமான அரிசியை கொண்டு மதிய உணவை சமைத்து மாணவர்களுக்கு வழங்க வேண்டும் தற்போது பத்தாம் வகுப்புரை உள்ள மதிய உணவு திட்டத்தை பனிரெண்டாம் வகுப்பு வரை விரிவுப்படுத்தி மாணவர்களுக்கு உதவ வேண்டும்

ஒன்றாம் வகுப்பு முதல் முதல் எட்டாம் வகுப்பு வரை மாணவர்களுக்கு மட்டும் அரசு சீருடையுடன் காலில் அணிய ஷூவுடன் சாக்ஸ் வழங்கிவருகிறது. இருந்தாலும் சரியாக அளவு எடுத்து வழங்கப்படுவதில் துணியின் ரகமும் சரியில்லாத நிலையில் அரசு கொடுக்கும் சீருடைக்கு பதிலாக பெரும்பாலான மாணவர்களுக்கு பெற்றோர்களே சீருடை வாங்கி கொடுக்கின்றனர் , ஆதலால் மாணவர்களுக்கு தரமான துணியை தேர்ந்தெடுத்து அந்தந்த பள்ளிக்கு தையல்காரரை பள்ளிக்கு வரவைத்து அளவெடுத்து தைத்துக்கொடுக்க வேண்டும் சீருடை நிறத்தை அந்தந்த பள்ளி மேலாண்மைக் குழு மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலமாக தேர்வு செய்ய ஆணை வழங்க வேண்டும் எட்டாம் வகுப்பு வரை என்பதை 12ஆம் வகுப்ப வரை விரிவு படுத்தி மாணவர்களுக்கு சீருடை வழங்க வேண்டும்

பருவத்தேர்வுகள் திருப்புதல் தேர்வுகள் காலாண்டு அரையாண்டு தேர்வு முழு ஆண்டுத் தேர்வு உள்ளிட்ட அனைத்து மாணவர்களுக்கும் அனைத்து தேர்வுகளுக்கும் வினா தாள் மற்றும் விடைதாள் வாங்குவதற்கு மாணவர்களிடம் கட்டணம் வசூலிக்க கூடாது முழு செலவையும் அரசே ஏற்க வேண்டும்,

பள்ளி வளாகத்தில் குறுக்கும் நெடுக்குமாக வரையரை இல்லாமல் மாணவர்கள் பார்வைக்கு படாதவாறு பயன்பாடு அற்ற கட்டடங்கள் உள்ளது இந்த கட்டடங்களை இடித்து சீரான மைதானமாக உருவாக்க வேண்டும் இதுபோன்ற கட்டடங்களை இடிக்காமல் பொதுப்பணி துறையினர் பழுது பார்க்க பரிந்துரை செய்து நிதி ஒதுக்குகிறது ஒதுக்கப்படும் நிதியில் இருந்து 20% விழுக்காடு கூட செலவு செய்வது இல்லை இதற்காவே தரமில்லாத கட்டடங்களுக்கு ஆயுளை கூட்டுகின்றனர் ,கட்டடங்களை பழுபார்த்தல் பணிகளை பொதுப்பணி துறையிடம் கொடுக்காமல் ஏற்கனவே இருந்ததை போன்று பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலமாகவும் பள்ளி மேலாண்மைக் குழு மூலமாக சரிசெய்ய நிதி ஒதுக்க வேண்டும்

பள்ளியில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிறப்ப வேண்டும் , பல ஆண்டுகளாக அலுவலக உதவியாளர் பணியிடங்கள், இரவு காவலர் பணியிடங்கள் , தூய்மை பணியாளர் பணியிடங்களை நிறப்ப வேண்டும்

மேற்கண்ட கொரிக்கைகளை நாளை பள்ளிக்கல்வி மானிய கோரிக்கைகயில் இடம்பெற செய்ய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மாண்புமிகு ராஜ்மோகன் அவர்களை தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

சா.அருணன்
நிறுவனத் தலைவர்
தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு