• Sat. May 30th, 2026
WhatsAppImage2026-05-28at214307
previous arrow
next arrow
Read Now

விவேக்கின் கீரீன் கலாம் திட்டத்தை தொடரும் அவரது நண்பர் செல்முருகன்

நடிகர்விவேக் கடந்த வருடம் ஏப்ரல் 17 அன்று எதிர்பாராத வகையில் மரணமடைந்தார் இன்று அவரது முதலாமாண்டு நினைவு தினத்தையொட்டி அவரின் உருவப் படத்தை தென்னிந்திய நடிகர் சங்க துணைத் தலைவர் பூச்சி எஸ்.முருகன் அவர்களும் செங்கல்பட்டு எஸ். பி. அரவிந்தன் ஐ. பி.எஸ். அவர்களும் திறந்து வைத்தனர்.

மேலும் விவேக் அவர்களின்கனவான கிரீன் கலாம் ஒரு கோடி மரங்கள் நடும் திட்டத்தை தொடரும் வகையில் இன்று விவேக்’ஸ் கிரீன் கலாம் என்ற பெயரில் மரம் நடும் திட்டத்தை விவேக் அவர்களின் நெருங்கிய நண்பரும் நடிகருமான செல் முருகன் இன்று காலை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் விவேக் அவர்களின் நண்பர்கள் துணையுடன் தொடங்கினார். தென்னிந்திய நடிகர் சங்க துணைத் தலைவர் பூச்சி எஸ். முருகன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். செங்கல்பட்டு எஸ். பி. அரவிந்தன் நடிகர்கள் பாபி சிம்ஹா, உதயா, உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.