• Mon. Aug 10th, 2026
WhatsAppImage2026-08-06at2018242
previous arrow
next arrow
Read Now

ஆலங்குளத்தில்  13 லட்சம் மதிப்பிலான குட்கா பறிமுதல்!

தென்காசி மாவட்டம் துத்திகுளம் சாலையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பெங்களுரில் இருந்து ஆலங்குளத்திற்கு வந்த மினி வேனை சோதனை செய்தபோது அதில் மூட்டை மூட்டையாக தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருந்தது, கண்டுபிடிக்கப்பட்டது..

தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில்,  ஆலங்குளத்தை சேர்ந்த ஆதிலிங்கம் என்பவர் பெங்களுரில் இருந்து தடைசெய்யப்பட்ட குட்கா பான்மசாலா உள்ளிட்ட போதை பொருட்களை ஆலங்குளத்திற்கு கொண்டு வந்து பதுக்கி வைத்து கேரளாவிற்கு கடத்தி செல்ல முயன்றது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து போலீசார் செல்லப்பாவை கைது செய்தனர். மேலும், ரூபாய் 13 லட்சம் மதிப்பிலான 46 மூட்டை புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.