• Wed. May 6th, 2026
WhatsAppImage2026-05-05at001329
previous arrow
next arrow
Read Now

சூர்யா வெட்கமும் ரசிகர்களின் கிண்டலும்

ஆக்க்ஷன், த்ரில்லர் படமாக உருவாக்கப்பட்டுள்ள இந்த படத்தின் ஃபஸ்ட் சிங்கிள் டிசம்பர் 17 ம் தேதி வெளியிடப்பட்டது. இந்நிலையில் செகண்ட் சிங்கிள் இன்று வெளியிடப்பட்டுள்ளது. செம மெலடியான இந்த பாடலில் சூர்யா வித்தியாசமான கெட்அப்பில் தோன்றி அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளார்.


டைரக்டர் பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள எதற்கும் துணிந்தவன் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. 2022 பிப்ரவரி 4 ம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.


உள்ளம் உருகுதைய்யா
அழகா…அழகா…உள்ளம் உருகுதைய்யா என துவங்கும் இந்த மெலடி பாடலில் சூர்யா, முருகக் கடவுள் கெட்அப், ராஜா கெட்அப்களில் தோன்றி சூர்யா நடித்துள்ளார். வித்தியாசமாக அமைக்கப்பட்டுள்ள இந்த பாடல் பலரையும் கவர்ந்துள்ளது.


இந்நிலையில் இந்த பாடல் பற்றி சூர்யா பதிவிட்டுள்ள டிவீட்டில், நீண்ட நாட்களுக்கு பிறகு ரொம்ப வெட்கப்பட்ட பாடல்….டைரக்டரே என பதிவிட்டுள்ளார். செகண்ட் சிங்கிள் லிங்குடன் சூர்யா பதிவிட்டுள்ள இந்த டிவீட் லைக்குகளை அள்ளி வருகிறது. ஏராளமானோர் ரீட்வீட் செய்து வருகிறார்கள்.அதே சமயம் நெட்டிசன்கள் பலர் சூர்யா முருகன் வேடத்திலும், ராஜா வேடத்திலும் தோன்றியதை வைத்து கமெண்ட் செய்துமீம்கள் உருவாக்கியும் வருகின்றனர்.

சூர்யா முருகன் வேடத்திலும், கார்த்தி கண்ணன் வேடத்திலும் இருக்கும் சிறு வயது ஃபோட்டோவையும் பதிவிட்டு, பிரியாணி படத்தில் ஒரு பாடலில் கார்த்தி, கண்ணன் வேடத்தில் வருவதையும், தற்போது சூர்யா முருகன் வேடத்தில் தோன்றியதையும் இணைத்து மீம் உருவாக்கி உள்ளனர்.