திண்டுக்கல் அருகே வக்கம்பட்டி புனித அந்தோனியார் – மதலமேரி கோயில் திருவிழா மின் தேர் பவனி கடந்த செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது அப்போது பட்டாசுகள் வெடிக்கப்பட்டன. இதில் எதிர்பாராத விதமாக வெடித்த பட்டாசிலிருந்து பறந்த தீப்பொறி, பட்டாசுகள் குவியலாக வைக்கப்பட்டிருந்த இடத்தில் விழுந்தது. இதனால் மொத்த பட்டாசுகளும் ஒரே நேரத்தில் வெடித்துச்சிதறின. இந்த விபத்தில் ராபின் அருள்ராஜ் உள்ளிட்ட 15 பேர் காயம் அடைந்து திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்

இந்நிலையில் சிகிச்சையில் இருந்த ராபின் அருள்ராஜ் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.
இதுகுறித்து தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் உலகநாதன் தலைமையிலான போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.




