• Fri. Aug 7th, 2026
WhatsAppImage2026-08-06at2018242
previous arrow
next arrow
Read Now

கொடைக்கானல் அரசு மருத்துவமனையை பார்வையிட்ட மாவட்ட எஸ்.பி..,

ByS.Ariyanayagam

Jul 29, 2026

கொடைக்கானல் அரசு மருத்துவமனையை மாவட்ட எஸ்பி ஜெயக்குமார்
பார்வையிட்டார். திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்த தங்கப்பாண்டி என்பவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் குடிபோதையில் பல பொருட்களை அடிந்து சேதப்படுத்தினார்.

குறித்த சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் காவலர் தங்கப்பாண்டி மீது வழக்கு பதிவு செய்து பணியிட நீக்கம் செய்யப்பட்டார்.

அதனைத்தொடர்ந்து இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.ஜெயக்குமார் கொடைக்கானல் அரசு மருத்துவமனைக்கு சென்று மருத்துவரிடம் விசாரணை மேற்கொண்டு சேதமடைந்த பொருட்களை பார்வையிட்டு கொடைக்கானல் ஆய்வாளரிடம் சரி செய்ய உத்தரவிட்டார்