• Mon. Oct 5th, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பிறந்தநாள் விழா..,

ByK Kaliraj

Jun 19, 2026

பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி அவர்களின் 56 வது பிறந்தநாள் விழா முன்னிட்டு விருதுநகர் மாவட்டம் சாத்தூர் முக்குராந்தல் பகுதியில் உள்ள பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கி பட்டாசு வெடித்து சிறப்பாக கொண்டாடப்பட்டது.

சாத்தூர் நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் அய்யப்பன் தலைமை வகித்தார்.

சாத்தூர் சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் கமிட்டி அமைப்பாளர் ஜோதி நிவாஸ் மெயின் பஜாரில் உள்ள வியாபார பெருமக்களுக்கும் பொது மக்களுக்கும் இனிப்புகள் வழங்கினார்.

கிழக்கு வட்டார தலைவர் சுப்பையா மேற்கு வட்டாரத் தலைவர் கும்கி கார்த்திக் சாத்தூர் வட்டார காங்கிரஸ் கமிட்டி பொறுப்பாளர் சன்.மாரிமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஆறுமுகம் சாத்தூர் சட்டமன்ற தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஜெய்கணேஷ் நகர துணைத் தலைவர் சின்னப்பன் வெள்ளைச்சாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.