• Thu. Jun 18th, 2026
WhatsAppImage2026-06-04at220632
previous arrow
next arrow
Read Now

கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட மாமன்ற உறுப்பினர்கள்….

ByK Kaliraj

Jun 18, 2026

சிவகாசி மாநகராட்சி மாமன்ற கூட்டம் 4 மாதங்களுக்கு பின் மேயர் சங்கீதா, துணை மேயர் விக்னேஷ் பிரியா, ஆணையாளர் கண்ணன் முன்னிலையில் நடைபெற்றது. மாநகராட்சியின் பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் சார்ந்த 247 தீர்மானங்களை முன் வைத்து மாமன்ற கூட்டம் நடைபெற்றது.

அப்போது வாதம் செய்த 6வது வார்டு மாமன்ற உறுப்பினர் ஸ்ரீனிகா, மாமன்ற கூட்டம் மாதம் மாதம் முறையாக நடத்தாமல் 5 மாதத்திற்கு ஒரு முறை நடத்துவதாகவும் அவ்வாறு நடத்த சட்டத்தின் சட்டத்தில் இடம் உள்ளதா என மேயரிடம் கேள்வி எழுப்பினார், அப்போது, அதையெல்லாம் நீங்கள் சொல்லக்கூடாது என மேயர் பதில் அளித்ததால் மேயரிடம் மாமன்ற உறுப்பினர்கள் கடும் வாக்குவாதம் செய்தததால் அமளி நிலவியது.

தொடர்ந்து வாதிட்ட மாமன்ற உறுப்பினர் ஸ்ரீனிகா 48 வார்டுகளிலும் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவது தொடர்பாக மேயர் ஆய்வு மேற்கொள்வதில்லை எனவும் நாங்கள் பார்த்து தேர்வு செய்தவர் தான் மேயர், எங்கள் குறைகளை கேட்க வேண்டிய கடமையை மேயருக்கு உள்ளது,

எங்கள் வீட்டு பிரச்சனையை சொல்ல நாங்கள் இங்கு வரவில்லை, வார்டு பிரச்சனையைத்தான் சொல்கிறோம், இதையெல்லாம் மாமன்றத்தில் தெரிவிக்காமல் உங்கள் வீட்டிலா வந்து சொல்ல முடியும் என மேயரிடம் வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.