தேனி மாவட்டம் உத்தமபாளையம் தாலுகா சின்னமனூரில் நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த சிவகாமி அம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது

ஆண்டுதோறும் இந்த திருக்கோவிலில் சித்திரை மாதம் திருவிழா நடைபெறும் முன்னதாக பத்து நாட்கள் சமுதாய மண்டகப்படி நடத்தப்பட்டு சாமி ஊர்வலம் பூப்பல்லக்கு அபிஷேகம் ஆராதனை நடைபெற்றது.
தொடர்ந்து இன்று சிவகாமி அம்மனுக்கும் பூலாநந்தீஸ்வரருக்கும் திருக்கல்யாண வைபோகம் வெகு விமர்சையாக நடைபெற்றது.
முன்னதாக அதிகாலையில் சிவகாமி அம்மனுக்கும் பூலானந்தீஸ்வரருக்கும் சிறப்பு 17 வகையான அபிஷேகங்கள் நடைபெற்றது. தொடர்ந்து கோயில் வளாகத்தில் அமைக்கப்பட்ட திருக்கல்யாண வைபோக நிகழ்ச்சியில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
தொடர்ந்து சிவகாமி அம்மனுக்கும் பூலாநந்தீஸ்வரருக்கும் மேளதாளங்கள் முழங்க திருக்கல்யாண வைபோகம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

இந்த திருக்கல்யாண வைபவம் முடிந்து நாளை திரு தேரோட்டம் நடைபெற உள்ளது நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த இந்த திருக்கோவிலின் திரு தேரோட்டமானது ஆயிரக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் நடைபெற உள்ளது திருக்கல்யாண நிகழ்வில் கலந்து கொண்ட ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.




