மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பேரூராட்சி 2 வார்டு குலசேகரன்கோட்டையில் குலசேகரபாண்டியமன்னரால்கட்டப்பட்ட பழமையும் பெருமையும் வாய்ந்த இயற்கை எழில்கொஞ்சும் சிறுமலை ஓடைக்கரையில் எழுந்தருளியுள்ள மீனாட்சிசுந்தரேசுவர் திருக்கோவில் சித்திரை திருவிழா கடந்த 19ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தினந்தோறும் மாலை 6மணிக்கு மீனாட்சிஅம்மன் சிம்மவாகனத்திலும், அன்னவாகனத்திலும்,காமதேனுவாகனத்திலும்,பட்டுப்பல்லக்கிலும்,குதிரைவாகனத்திலும்,ரிஷபவாகனத்திலும்,யாளிவாகனத்திலும் அருள் பாலித்தார். 26ந்தேதி மதியம் 3மணிக்கு தவத்திரு ஏடுராதாகிருஷ்ணன் மண்டகப்படியிலிருந்து செங்கோல், வைரகிரீடம், தங்ககவசம் ஆபரணப்பெட்டி புறப்பாட்டு இரவு 7.50மணிக்கு மீனாட்சிஅம்மனுக்கு பட்டாபிஷேகம் நடந்தது. 27ந்தேதி திங்கள்கிழமை காலை 8மணிக்கு போடிநாயக்கன்பட்டி பாமா ருக்குமணி சமேத கோபாலகிருஷ்ணன் கோவிலில் இருந்து சீர்வரிசையுடன் உற்சவர் புறப்பாடு மற்றும் சந்தைபாலம் பாலதண்டாயுதபாணி கோவில்களில் இருந்து சீர்வரிசை புறப்பாடு நடந்தது. அதேபோல் மாலை 6மணிக்கு தாதம்பட்டி இரட்டைவிநாயகர்கோவிலிருந்து மேளதாளத்துடன் சுந்தரேசுவரை அழைத்துச்சென்று வல்லபகணபதிகோவிலில் மீனாட்சியம்மன் திக்விஜயம் நடந்தது.

அதன்பின் சுந்தரேசுவர் மீனாட்சிஅம்மன் மாலை மாற்றுஉற்சவத்தை தொடர்ந்து 108முளைப்பாலிகை மற்றும் 108 சீர்வரிசைதட்டுடன் ஊர்வலமாக 2கிமீதுhரம் நடந்துசென்று திருக்கோவிலை அடைந்தது. 28ந்தேதி செவ்வாய்;கிழமை காலை 10.45மணிக்கு சிவப்புகலர் அங்கியும் பச்சைபட்டு உடுத்திய மீனாட்சிசுந்தரேசுவர், சிகப்புகலர்படாரில் அரக்கபச்சைபட்டுடுத்திய மீனாட்சிக்கு மங்களநான்பூட்டி திருக்கல்யாணம் நடந்தது. இதில் மீனாட்சியம்மனாகவிஸ்வநாதபட்டர், சுந்தரேசுவரராககுமரேசன்பட்டர் ஆகியோரும் சர்வசாதகமாக ஜெய்கணேஷ்பட்டரும் கோவில் அர்சகர் கிருஷ்ணகுமாரும் சிறப்பு பூஜைகள்செய்தனர். 12மணிக்கு திருமாங்கல்யம்சரடு அன்னதானம் வழங்கப்பட்டது.

மாலை 6மணிக்கு பரதநாட்டியநிகழ்ச்சி நடந்தது. 29ந்தேதி புதன்;கிழமை இன்று மாலை 6மணிக்குதேரோட்டம் நடக்கிறது. 30ந்தேதி வியாழக்கிழமை மாலை 6மணிக்கு தீர்த்தவாரியுடன் திருவிழா நிறைவடைகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் திருப்பணிக்குழுவினர் மற்றும் கிராமபொதுமக்கள் செய்து வருகின்றனர்.




