• Tue. Aug 4th, 2026
WhatsAppImage2026-07-30at222010
previous arrow
next arrow
Read Now

தனியார் பள்ளிகளில் பிரெஞ்சு மொழியை நீக்கினால் போராட்டத்தில் ஈடுபடுவோம்..,

ByM.I.MOHAMMED FAROOK

Apr 27, 2026

புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் இன்று திமுக சட்டமன்ற உறுப்பினர் நாஜிம் செய்தியாளர்களிடம் பேசியதாவது:-

புதுச்சேரி மாநிலத்தில் உள்ள சி.பி.எஸ்.இ அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பிரெஞ்சு மொழி நீக்குவது தவறான முடிவு என்றும் புதுச்சேரி மாநிலத்தின் பாரம்பரியமாக இருந்து வரும் பிரெஞ்சு கலாச்சாரத்தை சீர் குலைக்கும் வகையில் மத்திய அரசு பிரஞ்சு மொழியை நீக்கும் முடிவை கைவிட வேண்டும் என்றும் பன்மொழி தன்மையுடன் விளங்கும் புதுச்சேரியில் தவிர்க்க முடியாத மொழியாக விளங்கும் பிரஞ்சு மொழியை நீக்குவது ஏற்க முடியாது எனவும் மும்மொழிக் கொள்கையை அமல்படுத்துவது வரக்கூடிய புதிய ஆட்சியில் சட்டமன்ற கூட்டத்தில் முடிவெடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

மேலும் மும்மொழிக் கொள்கையை அமல்படுத்தும் திட்டத்தை கைவிடாவிட்டால் ஒத்த கருத்துடைய அரசியல் கட்சிகள் மற்றும் மக்களை திரட்டி திமுக சார்பில் போராட்டத்தில் ஈடுபடும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.