மதுரை பெருங்குடி பகுதியை சேர்ந்தவர் சிவனேசன் சிவனேசன் கடந்த 10 வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். இந்நிலையில் இவரது மனைவி பொற்கொடியின் பராமரிப்பில் சிவபெருமாள் வளர்ந்து வந்தார்.

சிவபெருமாள் (வயது 30) இவர் சரக்கு வாகனம் ஓட்டி வருகிறார் .
இவருக்கு திருமணம் ஆகி 5 வருடங்களுக்கு முன் மனைவி பிரிந்து சென்று விட்டார்.
இந்நிலையில் சிவபெருமாள் தினமும் குடிபோதையில் தனது தாயார் பொற்கொடி இடம் பணம் கேட்டு வந்து தொந்தரவு செய்து வந்துள்ளார் .
மேலும் அடித்து மிரட்டவும் செய்துள்ளார்
இந்நிலையில் இன்று இரவு 7 மணி அளவில் குடிபோதையில் வந்த சிவபெருமாள்
தாயார் பொற்கொடியிடம் பணம் கேட்டு தகராறு செய்து அடித்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த பொற்கொடி அருகில் இருந்த அம்மிக்கல்லை எடுத்து சிவனேசன் மேல் எரிந்ததில் சிவபெருமாள் தலையில் பட்டுசம்பவ இடத்திலே பலியானார்.

இதுகுறித்து அருகில் உள்ளவர்கள் பெருங்குடி காவல் நிலையத்திற்கு அளித்த புகாரைத் தொடர்ந்து பெருங்குடி போலீஸ் சார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சிவ பெருமாளின் தாயார் பொற்கொடியிடம் விசாரணை செய்து வருகின்றனர். மேலும் இறந்த சிவபெருமானின் உடலை கைப்பற்றி உடற்கூராய்விற்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்
தாயாரிடம் தகராறு செய்த மகனை அம்மிக்கல்லால் கொலை செய்த சம்பவம் பெருங்குடி பகுதியில் பரபரப்பாக காணப்படுகிறது.




