• Thu. Apr 16th, 2026
WhatsAppImage2026-04-10at0716401
previous arrow
next arrow
Read Now

நீச்சல் அகாடமி சார்பில் புதிய நீச்சல் குளம் திறப்பு விழா..,

ByKalamegam Viswanathan

Feb 21, 2026

மதுரை வேலம்மாள் குளோபல் பள்ளியில் தமிழகத்தில் முதன்முறையாக சர்வதேச தரத்திலான நீச்சல் அகாடமி சார்பில் புதிய நீச்சல் குளம் திறப்பு விழா நடைபெற்றது

மதுரை வேலம்மாள் குளோபல் பள்ளியில் தமிழகத்தில் முதன்முறையாக சர்வதேச தரத்திலான புதிய நீச்சல்குளம் திறப்பு விழா நடைபெற்றது
வேலம்மாள் குழும தலைவர் முத்துராமலிங்கம் தமிழ்நாடு அட்வகேட் ஜெனரல் அஜ்மல் கான் மற்றும் வருமானவரித்துறை (புலனாய்வு) இயக்குனர் பீட்டர் ஜெரால்டு மதுரை வேலம்மாள் புதிய நீச்சல் குளத்தை திறந்து வைத்தனர் .

தமிழகத்திலேயே முதன்முறையாக 50 மீட்டர் நீளமும் 25 மீட்டர் அகலமும் கொண்ட 11 நீச்சல் வீரர்கள் கலந்து கொள்ளும் வகையில் நீச்சல் குளம் வடிவமைக்கப்பட்டு உள்ளது.

இதில் பயிற்சி பெறும் வீரர்கள் ஃப்ரீ ஸ்டைல் பட்டர்ஃபிளை , டைவிங் உள்ளிட்ட 7வகை நீச்சல் பயிற்சிகள் சர்வதேச நீச்சல் அகாடமியை சேர்ந்த பயிற்சியாளர்கள் மூலம் பயிற்சி அளிக்கப்படுகிறது .

மாணவிகளுக்கு பெண் பயிற்சியாளர்களைக் கொண்டும் மாணவர்களுக்கு ஆண் பயிற்சியாளர்களை கொண்டும் பயிற்சிகள் வழங்கப்படுகிறது

இதன் மூலம் தென் மாவட்ட மாணவர்கள் சர்வதேச நீச்சல் போட்டியில் பங்கேற்கும் வகையில் இங்கு மிகவும் சிறப்பாக பயிற்சி பெற்ற பயிற்சியாளர்கள் உதவியுடன் தேசிய மற்றும் ஆசியன் கேம் உள்ளிட்ட நீச்சல் போட்டியில் பங்கேற்று சாதனை புரிய முடியும்

இங்கு வேலம்மாள் பள்ளி மாணவர்களைத் தவிர வெளியில் இருந்து வரும் மாணவர்களுக்கும் சிறப்பாக பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது..

நீச்சல் போட்டியில் சிறப்பாக சாதனை புரிந்து வெற்றி பெற வரும் மாணவர்களை வரவேற்கிறோம் என வேலம்மாள் குழும தலைவர் முத்துராமலிங்கம் கூறினார் .