• Sun. Aug 9th, 2026
WhatsAppImage2026-08-06at2018242
previous arrow
next arrow
Read Now

காவல்துறை, பொதுப்பணி துறையினர் வேளிமலை முருகனுக்கு பால் காவடி

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை காவல்துறை மற்றும் பொதுப்பணி துறையினர் விரதமிருந்து வேளிமலை முருகனுக்கு பால் காவடி ஏந்தி சென்று நேர்த்தி கடன் செய்யும் பாரம்பரிய நிகழ்வு நடைபெற்றது.

கன்னியாகுமரி மாவட்டம் முந்தைய திருவிதாங்கூர் சமஸ்தானத்திக் கீழ் இருந்தபோது ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதத்தின் கடைசி வெள்ளிக் கிழமையன்று குற்றங்கள் குறைந்து மக்கள் அமைதியாக வாழவும் நீர்வளம் செழித்து விவசாயம் தழைத் தோங்கவும் பாரம்பரியமாக வருடா வருடம் தக்கலை காவல் துறை மற்றும் பொதுப்பணித்துறை சார்பில் வேளிமலை முருகனுக்கு பால் காவடி ஏந்தி சென்று நேர்த்திக்கடன் செய்வது வழக்கம்.

இந்த வருடம் கார்த்திகை இணைந்து விரதமிருந்து குமாரக்கோயில் முருகன் கோயிலுக்கு காவடி ஏந்தி சென்று நேர்த்தி கடன் செலுத்துவது வழக்கம். இந்த ஆண்டின் கார்த்திகை கடைசி வெள்ளியான இன்று தக்கலை காவல் நிலையத்திலிருந்து போலீசாரும் காவல் துறை அதிகாரிகளும் நேர்த்திக் கடன் செலுத்தினர்.

அதேப்போல் மழை பொழிய வேண்டியும் விவசாயம் செழிக்கவும் பொதுப்பணி துறை அதிகாரிகளும் ஊழியர்களும் தக்கலை பொதுப்பணித் துறை அலுவலகத்திலிருந்தும் 41- நாள் விரதமிருந்து வேளிமலை முருகனுக்கு நாதஸ்வர மேள தாளங்கள் முழங்க பால் காவடி ஏந்தி சென்று வழிபாடு நடத்தும் நிகழ்வு நடைபெற்றது.