• Tue. Mar 3rd, 2026
WhatsAppImage2026-02-27at0552154
previous arrow
next arrow
Read Now

நடிகர் சிவகுமார் குடும்பத்தில் அடுத்தடுத்து உருவாகும் இயக்குனர்கள்…

Byமதி

Oct 29, 2021

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் கார்த்தி மற்றும் ஜோதிகா இருவரும் இயக்குனர் அவதாரம் எடுக்க இருக்கிறார்கள்.

இந்திய சினிமாவை பொறுத்த வரை நடிகைகளின் ஆயுள் குறைவு. ஒரு சிலர் மட்டுமே தங்களுக்கான இடத்தை தொடர்ந்து தக்க வைத்துக் கொள்ளுவதுண்டு. ஜோதிகாவும் அப்படிப்பட்ட ஒருவர்தான். திருமணத்திற்கு பின் திரைத்துறையில் இருந்து ஒதுங்கி இருந்த அவர் தற்போது நல்ல படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். அந்தவகையில் தற்போது அவர் ஒரு படத்தை இயக்கவும் தயாராகி வருவதாக கூறப்படுகிறது. தீவிர கதை விவாதத்தில் இருப்பதாகவும் தெரிகிறது.

மேலும், கார்த்தி இயக்குனர் மணிரத்னத்திடம் உதவி இயக்குனராக பணியாற்றிய அனுபவத்தோடு இருப்பவர். இவர் விரைவில் ஒரு திரைப்படத்தை இயக்க இருக்கிறார்.இந்தப்படங்களை சூர்யாவின் 2d என்டர்டெயின்மென்ட் தயாரிப்பு நிறுவனமே தயாரிக்க இருக்கிறது.