• Fri. Apr 26th, 2024

கர்நாடகாவில் 144 தடை உத்தரவு…

Byமதி

Oct 29, 2021

கன்னட திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வந்த புனித் ராஜ்குமார், இன்று காலை தீடிரென மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்துள்ளார். இதையடுத்து மருத்துவமனையில் 11.40 மணியளவில் அனுமதிக்கப்பட்டு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும், சில மணிநேரத்தில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

நடிகர் புனித் ராஜ்குமாரின் திடீர் மறைவு ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. புனித் ராஜ்குமார் உயிரிழந்த சம்பவம் தெரிந்ததும் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மருத்துவமனைக்கு வெளியே ரசிகர்கள் கூடி குவிந்தவண்ணம் இருக்கிறார்கள். இதுபோன்ற பதட்டமான சூழ்நிலை காரணமாக பெங்களூர், மைசூர் உட்பட பல்வேறு நகரங்களிலும் கடைகள் மற்றும் வணிக வளாகங்கள் பூட்டப்பட்டு வருகின்றன. அலுவலகம் சென்றவர்கள் அவசரமாக வீடுகளை நோக்கி திரும்பிக் கொண்டிருக்கிறார்கள். பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் சில பகுதிகளில் 144 தடை உத்தரவும் அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்து தனது சமூக வலைத்தள பக்கத்தில் ‘மறைந்த கன்னட நடிகர் ராஜ்குமார் அவர்களின் மகனும் பவர் ஸ்டார் புனித் ராஜ்குமாரின் திடீர் மரணம் குறித்து கேள்விப்பட்டு ஆழ்ந்த அதிர்ச்சியும் திகைப்பும் ஏற்பட்டது. இவரது மறைவு எனக்கு தனிப்பட்ட இழப்பு.

திரை நட்சத்திரமாக இருந்தபோதிலும் ஒரு தாழ்மையான மனிதராகவே இருந்தார். தலைவர் கலைஞரின் மறைவுக்கு அவரது குடும்பத்தினர் ஆறுதல் கூறுவதற்காக எங்கள் கோபாலபுரம் இல்லத்திற்குச் சென்ற புனித் அவர்களின் அன்பான செயல் இன்னும் என் இதயத்தில் உள்ளது.

கன்னட திரையுலகம் மிகச்சிறந்த மனிதரை இழந்துவிட்டது. இந்த ஈடு செய்ய முடியாத இழப்பால் துயருற்றிருக்கும் புனித் குடும்பத்தினருக்கும், கர்நாடக மக்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்’ என்று பதிவு செய்து இருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *