மதுரை மாவட்டம் உசிலம்பட்டி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட உசிலம்பட்டி, செல்லம்பட்டி, சேடபட்டி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளைச் சேர்ந்த 300 க்கும் அதிகமான கர்ப்பிணி தாய்மார்களுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி உசிலம்பட்டி தனியார் மண்டபத்தில் அமைச்சர் நிர்மல் குமார், எம்எல்ஏ விஜய், தங்கப்பாண்டி மற்றும் மதுரை மாவட்ட ஆட்சியர் நிஷாந்த் கிருஷ்ணா தலைமையில் நடைபெற்றது.,

நிகழ்வின் முடிவில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் நிர்மல்குமார்.,
உசிலம்பட்டி தொகுதியில் 300 க்கும் மேற்பட்ட கர்ப்பிணி பெண்களுக்கு சமுதா வளைகாப்பு மற்றும் 70 க்கும் மேற்பட்டோருக்கு பட்டா வழங்கப்பட்டது.,

கர்ப்பிணி தாய்மார்களுக்கு அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் தேவையான வசதிகளை செய்து தர உதவியாக நாங்கள் இருக்கிறோம் என சொல்லும் ஒரு நிகழ்வாக அமைந்தது.,

பெண்களுக்கு ஒரு தைரியத்தை கொடுக்கும் என நம்புகிறோம், கண்டிப்பாக பெண்களுக்கு முதல்வரும், அரசும் இருக்கும் என்பதை உறுதி படுத்தும் வகையில் இந்த நிகழ்வில் கலந்து கொண்டு வாழ்த்தினோம், தொடர்ந்து தாய்மாமன் தங்க மோதிர திட்டமும் அவர்களுக்கு பயனளிக்கும்.,
பாரத பிரதமர் நிகழ்வு அரசு நிகழ்ச்சி, தமிழக நலனுக்காக மட்டுமே தான் இறங்கி போவோமே தவிர வேறு எதற்காகவும் இல்லை, கண்டிப்பாக தமிழக மக்களுக்காக தமிழக நலனுக்காக திட்டங்களை துவங்கி வைக்க பிரதமர் வருகிறார்.,
நேற்று நடந்தது எங்களது கூட்டணி கட்சியின் நிகழ்ச்சி அதில் முதல்வரும், ராகுல் காந்தியும் நண்பர்கள் அந்த நிகழ்வில் இருவரும் சந்தித்து கொண்டனர்.,

எஸ்.ஐ.ஆர் தமிழகத்திற்கு எதிராக தவறு நடந்துள்ளது என்பதை முதலில் தெரிவித்து தமிழக வெற்றி கழகம் தான், திமுக என்ன என்ன குளறுபடிகளை வாக்காளர் பட்டியலில் செய்தார்கள் என்பது அனைவருக்குமே தெரியும், எஸ்.ஐ.ஆர் நடைபெறாமல் இருந்திருந்தால் தமிழக வெற்றிக் கழகம் 170 தொகுதிக்கு மேல் வெற்றி பெற்றிருக்கும், இதனால் தான் திமுக வென்றது, இது இல்லையென்றால் திமுக 20 தொகுதி கூட வெற்றி பெற்றிருக்காது என பேட்டியளித்தார்.,



