ஸ்ரீவில்லிபுத்தூர் ஒன்றிய கட்டுமான தொழிலாளர் சங்கத்தின் 11வது ஒன்றிய மாநாடு ஸ்ரீவில்லிபுத்தூரில் தோழர் பெரியசாமி நினைவகத்தில் நடைபெற்றது…..
மாநாட்டை துவக்கி வைத்து கட்டுமான தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட நிர்வாகி சர்க்கரை பேசினார்

நடைபெற்ற வேலைகள் குறித்த அறிக்கையை செயலாளர் வி சந்தனம் முன்மொழிந்தார் மாநாட்டை வாழ்த்தி சங்கத்தின் மாவட்ட பொருளாளர் வீர சதானந்தம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர் எஸ் வி சசிக்குமார் வாழ்த்துரை வழங்கினர். மாநாட்டை நிறைவு செய்து சிஐடியு தொழிற்சங்கத்தின் மாவட்ட செயலாளர் பி என் தேவா உரையாற்றினார்
புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டது.

ஒன்றிய தலைவராக முத்துராஜ் ஒன்றிய செயலாளராக வி சந்தனம் பொருளாளராக பாண்டி மற்றும் 19 பேர் கொண்ட ஒன்றிய குழு தேர்வு செய்யப்பட்டது.



