• Sun. Oct 11th, 2026
WhatsAppImage2026-10-09at2207422
previous arrow
next arrow
Read Now

விலைவாசி உயர்வு இல்லை என முழு பூசணிக்காயை அமைச்சர் சோற்றில் மறைக்கலாமா?-ஆர் பி உதயகுமார்..,

ByKalamegam Viswanathan

Oct 11, 2026

சென்னை வந்த ராகுல் காந்தியை முதல்வர் விஜய் அவரது இல்லத்திலே சந்தித்து, ஒரு மணி நேரத்திற்கு மேலே அரசியல் நிகழ்வுகள் குறித்தும், தமிழகத்தின் வளர்ச்சி குறித்தும் ஆலோசனை நடத்தி இருக்கிறார். அதைத் தொடர்ந்து, இரண்டு பேர்களும் சாப்பிட வெளியே சென்றார்கள் .. இந்த காட்சிகள் எல்லாம் ஊடகங்களில், செய்திகளாக வெளியானது.

இந்த சூழ்நிலையில, இன்றைக்கு நம்முடைய பாரத பிரதமர் அவர்கள் 25 ஆண்டுகள் பொது வாழ்க்கையிலே ஒரு சாதனை சரித்திரம் படைத்திருக்க அந்த வெற்றி கொண்டாட்டத்தோடு, பாரத பிரதமர் மோடிஜி அவர்கள் இன்று பூந்தமல்லி வடபழனி இடையேயான வழித்தடத்தில் மெட்ரோ ரயில் சேவையை முதல்வர் விஜயுன் தொடங்கி வைக்கிறார்கள்.

தொடர்ந்து, பிரதமருடன் முதல்வர் விஜய் அவர்களும். போரூர் முதல் பூந்தமல்லி வரை மெட்ரோ ரயிலில் பயணிக்கின்றார்கள். அதே ரயிலிலே மீண்டும் போரூர் ரயில் நிலையம் திரும்ப வருகின்றார்கள். இது என்ன முக்கியமான செய்தியா என்று கூட நீங்கள் கேட்கலாம். இதை பார்த்துக் கொண்டிருக்கிற மக்களுக்கும் தோன்றலாம்,

பிரதமரோடு பயணிக்கும் பொன்னான நேரத்தை நம்முடைய தமிழகத்தினுடைய முதல்வர் தமிழகத்திலே வளர்ச்சிக்காக நிலுவையில் இருக்கக்கூடிய கோரிக்கைகள், குறிப்பாக கர்நாடக மேகதாது அணை திட்டத்திற்கு எதிர்ப்பு, கிருஷ்ணா நதிநீர் இணைப்பு, முல்லை பெரியாரில் புதிய அணை கட்ட தடுப்பது, இலங்கை கடற்படையினால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதை தடுப்பது கச்சத்தீவு மீட்பு, அதேபோல தமிழ்நாட்டில் வான்வெளி அமைப்புகளுக்கான மையம், அமைக்க கோரிக்கை, அரசு நிகழ்ச்சிகளை தமிழ் தாய் வாழ்த்து பாரம்பரியத்தை பாதுகாப்பது குறித்து கோரிக்கைகள். இருக்கிறது அதோடு, தமிழகத்துக்கான வளர்ச்சி திட்டங்களையும், பாரத பிரதமருடன் முதல்வர் சேர்ந்து பயணிக்கிற இந்த ஒரு பொன்னான நேரத்தில் எடுத்து கூறுவாரா?

நேற்று எதிர்க்கட்சித் தலைவரை நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை விஜய் சந்தித்திருக்கிறார்கள்.

ஏன் இந்த மக்களிடத்தில் எதிர்பார்ப்பு வருகிறது என்று சொன்னால், பல மாநிலங்களிலே பிரதமரும் முதல்வரும் சேர்ந்து பயணிப்பது சமீப காலமாக அரிதாகிவிட்டது என்றுதான் நம்ம செய்திகள்ல பார்க்கிறோம். குறிப்பா, தமிழ்நாட்டிலே கடந்த கால திமுக ஆட்சியில பாம்பன் பாலத்தை பாரத பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணிக்க வருகிறபோது, அப்போது முதல்வராக இருந்த ஸ்டாலின் ஊட்டிக்கு போய்விட்டார். ஆனால் அதுக்கு முன்னாடி கேலே விளையாட்டு போட்டியை பட்டு வேஷ்டி, பட்டு சட்டை அணிந்துபாரத பிரதமரை வரவேற்று, விளையாட்டு போட்டியை பிரதமருடன் இணைந்து முதல்வர் சேர்ந்து துவக்கி வைத்தார் இந்த இரண்டு முரண்பாடான நிகழ்வு தமிழகத்தில் ஒரு முன் உதாரணமாக இருக்கிறது.

ஆனால் எடப்பாடியார் முதல்வராக இருந்த பொழுது பாரத பிரதமரோடு இணைந்து எயிம்ஸ் மருத்துவமனை, 11 மருத்துவ கல்லூரிகளை ஒரே ஆண்டில். கொடுத்து, தமிழகத்துக்கு தேவையான கட்டமைப்பு வளர்ச்சிகள், சாலைகள், நான்கு வழி சாலைகள், பறக்கும் சாலைகள், சாலை மேம்பாடு, இவையெல்லாம் வந்து மத்திய அரசிடம் இருந்து பெற்று கொடுத்தார்.

இந்த முரண்பாடான அணுகுமுறை, இரட்டை வேடம்,

திமுகக்கு அரசியல் பாதுகாப்பு வேணும்னா, வெண்கொடை பிடித்து வரவேற்பது பாரத பிரதமர் வரவேற்பது, அவருடைய விழாவிலே கலந்து கொள்வது, கலைஞர் நாணயம் வெளியிடுவதற்கு பாதுகாப்புத் துறை அமைச்சரோட முதல்வர் கலந்து கொண்டார் அது அரசு நிகழ்ச்சியா, தனியார் நிகழ்ச்சியான்னு இன்ன வரைக்கும் விடை தெரியல.

இது போன்ற முரண்பாடா ல்

ஆனால் இந்த போன்ற முரண்பாடுனால யாருக்கு பின்னடைவு? தமிழகத்துக்கு தான் பின்னடைவு.

கும்பிட போன தெய்வம் குறுக்கே வந்தது போல இன்றைக்கு பிரதமர் தமிழ்நாட்டுக்கு வருகிறார். இந்த பொன்னான வாய்ப்பை, பொன்னான நேரத்தை அவரோடு பயணிக்கிற அந்த நேரத்தில், தமிழ்நாடு தமிழ் மொழி, தமிழ் இனம், தமிழக மக்களுடைய வளர்ச்சிகாக முதல்வர் விஜய் திட்டமிட வேண்டும்.

கடந்த காலம் போல இரட்டை வேடம் போடாமல், இரட்டை வேடம் போடக்கூடாது ஏனென்றால் தேர்தல் பிரச்சாரத்தில் விஜய் கொள்கை எதிரி பாஜக அரசியல எதிரி திமுக என்று பேசினார்.

ஆனால், தேர்தலுக்கு பிறகு வெற்றி பெற்று ஆட்சி அமைத்ததற்கு பிறகு, அவருக்கு தனிப்பெரும்பான்மை இல்லாத ஒரு சூழ்நிலையிலே கூட மேதகு ஆளுநர் அவருக்கு போதிய கால அவகாசம் கொடுத்தார், சட்டமன்றத்தில் பெரும்பான்மை நிரூபிக்கிறதுக்கு எல்லாம் அவகாசம் கொடுத்தார்.

கடந்த கால ஆட்சியில இரட்டை வேடம் போட்டு ஒருமுறை வரவேற்பது, ஒருமுறை புறக்கணிப்பது, முரண்பாடா நடப்பது, இதில் என்ன ஆச்சு? தமிழ்நாடு பின்னோக்கி போயிருச்சு. தமிழ்நாடு வளர்ச்சி வந்து பாதிக்கப்பட்டுச்சு.

அதனாலதான் உங்க மீது விஜய் மீது நம்பிக்கை வைத்து, முதல்வராக அரியணையில் தமிழ்நாட்டு மக்கள் உட்கார வைத்திருக்கிறார்கள். நீங்களும் திமுகவை போலவே தவெக ஆட்சியின் ஆயுள் காலத்தை காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்பதற்காக மட்டுமே கருத்தில் கொண்டு, பிரதமர சந்திப்பை பயன்படுத்திக் கொள்ளாமல், தமிழ்நாடு வளர்ச்சிக்கும் பயன்படுத்தி, தமிழ்நாட்டுடைய முன்னேற்றத்திற்கும் பயன்படுத்திக் கொள்ள, ஆக்கப்பூர்வமாக வளர்ச்சிக்காக பயன்படுத்திக் கொள்வாரா அல்லது கோட்டை விட்டு விடுவாரா, தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு அடித்தளம் அமைத்துக் கொடுப்பாரா, என்றெல்லாம் கேள்விகள் இருக்கிறது.

தமிழ்நாட்டில் விலைவாசி பயங்கரமாக உயர்ந்து வருகிறது. அரிசி விலை எல்லாம் இன்னைக்கு சொல்ல முடியல. ஆனா, சம்பந்தப்பட்ட அமைச்சர் வெங்கட்ராமன் வ அப்படி எல்லாம் இல்லை என முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கிறார். அது மக்களுக்கு தெரியும், விலை உயர்ந்து இருக்கா இல்லையா? என்று

எடப்பாடியார் சட்டமன்றத்திலே விலைவாசி உயர்வை பத்தி தெளிவா புள்ளி விவரங்களோடு ஆதாரங்களோடு எடுத்து பேசினார். ஆனால் அன்னைக்கு விஜய் புழல் சிறைக்கு ஆய்வுக்கு போயிட்டார்.

அதேபோல இந்த கடலோர பகுதிகளில் போதை பொருள் நடமாட்டம் அறிவித்துள்ளது புத்தகம் போய் தூக்கிட்டு போன இளைஞர்கள் கையில போதை பொருள் இருப்பது மிகப்பெரிய கவலை அளிக்கிறது.

ஜென்சி தலைமுறையை நம்பிக்கை அளிக்கக்கூடிய கடவுளாக விஜய் அவர்கள் இருக்கிறார். அந்த ஜென்சி தலைமுறை இப்ப இந்த கடலோர பாதுகாப்புக்கு வந்து நம்ம கோரிக்கை வைக்கலாம். இன்னும் வளர்ச்சிக்கான நிதிகளை எல்லாம் பெறலாம்.

புரட்சித்தலைவி அம்மா இருக்கும்பொழுது பாரதப் பிரதமர் மோடிஜி அம்மாவின் இல்லத்திற்கு வந்த அப்போது தமிழ்நாட்டு மக்களின் கோரிக்கையை வழங்கினார்
இந்த பொன்னான வாய்ப்பை கோட்டை விட்டு விடாமல், தன்னுடைய ஆட்சிக்கான ஆயுள் காலத்தை கருத்திலே கொண்டு மட்டும் அவர் செயல்படாமல், கொள்கை எதிரி என்பதை எல்லாம் அவர் தள்ளி வைத்துவிட்டு, தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக முதல்வர் விஜய் அவர்கள் துணை நிற்பார் சாதித்துக் காட்டுவார் என்பதை மக்கள் எதிர்பார்ப்போடு காத்திருக்கிறார்கள்.