• Mon. Aug 10th, 2026
WhatsAppImage2026-08-06at2018242
previous arrow
next arrow
Read Now

குற்றாலத்தில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது…

Byமதி

Oct 17, 2021

தமிழகத்தில் வெப்ப சலனம் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் உள்ளிட்ட, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கன மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்நிலையில் தமிழகம் முழுவதுமே பெரும்பாலான இடங்களில் நல்ல மழை கொட்டியது.

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த மழை காரணமாக குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவி, புலியருவி ஆகியவற்றில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது. இதனால், தென்காசி மாவட்டம் குற்றாலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் ரம்மியமான சூழல் நிலவுகிறது.