• Sat. Oct 12th, 2024

விடுதலை போராட்ட வீரர்களை பெருமைப்படுத்துகிறார் மோடி – அமித்ஷா…

Byமதி

Oct 17, 2021

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அந்தமானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். தலைநகர் போர்ட்பிளேரில் நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அவர் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்தார்.

அதன் பின்னர் இந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், ‘தேசப்பற்று மிக்க விடுதலை போராட்ட வீரர்களுக்கு, இந்த தீவுகள் முக்கிய இடமாக விளங்கி இருக்கின்றன. ஏனெனில் 1943-ல் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் இங்கேதான் மூவர்ண கொடியை முதன் முதலாக ஏற்றினார். அத்துடன் 1945 வரை 2 ஆண்டுகளுக்கு ஆங்கிலேய அரசிடம் இருந்து இந்த மண்ணை பாதுகாத்தார்.

விடுதலைக்கு பின் நாட்டை ஒருங்கிணைத்த சர்தார் வல்லபாய் படேலோ பல ஆண்டுகளாக உரிய அங்கீகாரமோ, மரியாதையோ, முக்கியத்துவமோ பெறவில்லை. அதேபோல் அந்தமானின் செல்லுலார் சிறையில் வீர சாவர்க்கர் 10 ஆண்டுகள் சிறை தண்டனையை அனுபவித்துள்ளார். ஆனாலும் அவர் கடைசிவரை தனது தைரியத்தை இழக்கவில்லை.

இப்படி புகழ்பெற்ற சில விடுதலை போராட்ட வீரர்களையும், அவர்களது பங்களிப்பையும் வேண்டுமென்றே சிறுமைப்படுத்தும் முயற்சிகள் நடந்தன.

ஆனால் பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையிலான பா.ஜனதா அரசு, குஜராத்தில் சர்தார் வல்லபாய் படேலின் சிலையை நிறுவியதுடன், நேதாஜியின் பிறந்த தினத்தை ‘வெற்றி தினம்’ ஆகவும் அறிவித்தது’ என அமித்ஷா கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *