• Wed. Jun 17th, 2026
WhatsAppImage2026-06-04at220632
previous arrow
next arrow
Read Now

நம்பியூர் வட்டார அளவிலான போலீஸ்- பொதுமக்கள் நல்லுறவு விளையாட்டு போட்டிகள்

ஈரோடு மாவட்டம் நம்பியூர் மற்றும் வரபாளையம் காவல் நிலையம் சார்பில் போலீஸ் பொதுமக்கள் நல்லறவு விளையாட்டு போட்டிகளை போலீஸ் இன்ஸ்பெக்டர் நிர்மலா தொடங்கி வைத்து பரிசுகள் வழங்கினார்.
சிறுவர்களுக்கு கயிறு இழுத்தல் போட்டி, கைப்பந்து, பூப்பந்தாட்டம், கபடி, மற்றும் 100 மீட்டர் ஓட்டம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல் உள்ளிட்ட பல்வேறு வகையான விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது.


நம்பியூரில் நடைபெற்ற போட்டிகளை நம்பியூர் மற்றும் வரப்பாளையம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் நிர்மலா தொடங்கி வைத்தார்.நம்பியூர் விஐபி நகர்,நம்பியூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, சாவக்கட்டுபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி, குமுதா மேல்நிலைப் பள்ளிகளில் போட்டியில் நடைபெற்றது.இதில் வெற்றி பெற்ற அணிகளுக்கு சிறப்பு பரிசுகளும் நினைவு பரிசுகளும் வழங்கப்பட்டது.வட்டார அளவில் வெற்றி பெற்ற அணிகளை ஈரோடு மாவட்ட அளவில் நடைபெறும் போட்டிகளில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
நிகழ்ச்சியில் சப் இன்ஸ்பெக்டர்கள் சண்முகம், ராஜமாணிக்கம், மகேஷ், குமுதா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் தாளாளர் கே.ஏ.ஜனகரத்தினம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.