• Sat. Apr 20th, 2024

வீழ்ந்து கொண்டிருக்கும் தொழிலை காக்க எதிர்பார்ப்போடு காத்திருக்கும் விசைத்தறியாளர்கள்…

வருகின்ற சட்டமன்ற கூட்டத்தொடரில் விசைத்தறிக்கான மின் கட்டண குறைப்பு மற்றும் ஆயிரம் யூனிட் இலவசம் என்ற அறிவிப்பை எதிர்நோக்கி விசைத்தறியாளர்கள் எதிர்பார்ப்பு காத்திருக்கிறார்கள்.
தமிழக முன்னாள் முதல்வர் கலைஞர் விசைத்தறி தொழிலை காக்கும் பொருட்டு இரண்டு மாதத்திற்கு 500 யூனிட் மின்சார மானியம் வழங்கியும் அதனைத் தொடர்ந்து முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 750 யூனிட்டாக உயர்த்தி தற்போது வரை நடைமுறையில் உள்ளது.
தமிழக முதல்வரின் சட்டமன்ற தேர்தல் வாக்குறுதியில் 1000 யூனிட் இலவசம் மின்சாரம் விசைத்தறி கூடங்களுக்கு வழங்கப்படும் என்று வாக்குறுதி கொடுத்துள்ளார்.ஆட்சிப் பொறுப்பேற்று ஒன்றை வருடங்களுக்கு மேலாக உள்ள நிலையில் வருகின்ற சட்டமன்ற கூட்டத்தொடரில் 1000 யூனிட் இலவசம் என்று அறிவிப்பை முதல்வர் வெளியிடுவார் என்று விசைத்தறியாளர்கள் எதிர்பார்த்துக் கொண்டுள்ளார்கள்.
விசைத்தறி கூடங்களுக்கான tariff 3A2 க்கு தமிழக அரசு கடந்த பல வருடங்களாக முதல் 750 யூனிட் இலவசம், அடுத்த 750 முதல் 1000 யூனிட்டுக்கு இரண்டு ரூபாய் 30 பைசா என்றும் ஆயிரம் யூனிட்டுக்கு மேல் 1500க்குள் மூன்று ரூபாய் 45 பைசா என்றும் 1500க்கு மேல் நான்கு ரூபா 60 பைசா என்று மின் கட்டணம் செலுத்தி வந்தனர். மேலும் நிலை கட்டணமாக 70 ரூபாய் மட்டுமே செலுத்தி வந்தோம்.கடந்த ஆகஸ்ட் மாதம் தமிழக அரசால் மின்சார கட்டணம் உயர்த்தப்படும் என்று அறிவித்து ,அதன் பின் கோவை ,மதுரை மற்றும் சென்னையில் நடைபெற்ற மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் கருத்து கேட்பு கூட்டத்தில் தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பின் நிர்வாகிகள் கலந்து கொண்டு கருத்துகளை பதிவு செய்தோம். அதன் பின் 10-09-2022 தமிழக அரசின் மின்சார வாரியத்தின் மூலம் புதிய மின் கட்டணத்தை அறிவித்திருந்தார்கள் அதன்படி முதல் 750 யூனிட்டுக்கு இலவசம் என்றும் 750 முதல் 1000 யூனிட்டுக்கு 3.00 ரூபாய் என்றும் 1000 யுனிட் மேல் 1500 4.50 பைசா என்றும் 1500 யூனிட்டுக்கு மேல் 6 ரூபாய் 50 பைசா என்றும்
மேலும் நிலை கட்டணமாக நூறு ரூபாய் என்றும் அறிவித்திருந்தார்கள்.இந்த அறிவிப்பின் மூலம் விசைத்தறி தொழில் பெரிதும் பாதிக்கப்படும் என்று கடந்த 20-09-2022 கொங்குநாடு தேசிய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளரும் திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் முன்னிலையில் தமிழக மின்துறை அமைச்சரை கூட்டமைப்பின் சார்பில் சென்னையில் சந்தித்து விசைத்தறிக்கான மின் கட்டணத்தை ரத்து செய்யக்கோரி எடுத்துரைத்தோம். அப்பொழுது அமைச்சர் முழுமையாக ரத்து செய்ய இயலாது, குறைத்து தர முயற்சி செய்கிறோம் என்று எங்களுக்கு வாய்மொழி மூலம் தெரிவித்து இருந்தார்.
இருந்த போதிலும் கடந்த நான்கு மாதங்களாக புதிய மின் கட்டணத்தில் கணக்கெடுப்பு செய்ததன் மூலம் எடுத்துக்காட்டாக 20தறி கொண்ட விசைத்தறி கூடம் ஒன்றுக்கு இரண்டு மாதத்துக்கு ஒரு முறை 8000 முதல் 10 ஆயிரம் வரை மின்கட்டணம் உயர்ந்துள்ளது.மின் கட்டணம் குறைப்பு அறிவிப்பை எதிர்பார்த்து இதுவரை பல இடங்களில் மின் கட்டணம் செலுத்தாமல் உள்ளார்கள்.ஆதலால் வருகின்ற சட்டமன்ற கூட்டத்தொடரில் முதல்வர் விசைத்தறிக்கான மின் கட்டணம் குறைப்பு மற்றும் ஆயிரம் யூனிட் இலவசம் என்ற நல்ல அறிவிப்பை விசைத்தறியாளர்கள் எதிர்பார்த்துக் கொண்டுள்ளார்கள்….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *