மொடக்குறிச்சி எம்எல்ஏ சி.கே சரஸ்வதி காலிங்கராயன் தினத்தை முன்னிட்டு அவரது சிலைக்கு மாலை அணிவித்தார்.
காலிங்கராயன் வாய்க்கால் பாசனத்துக்கு திறக்கப்பட்டு 740 ஆண்டுகள் நிறைவடைகின்றன. கடந்த பல ஆண்டுகளாக இந்த நாளினை (தை 5) காலிங்கராயன் தினமாக பாசன விவசாயிகளால் கொண்டாடி வருகிறார்கள். அதன்படி இன்று காலை காலிங்கராயன் பாளையம் அணைக்கட்டில் உள்ள அவரது முழு உருவச்சிலைக்கு பாரதிய ஜனதா கட்சியின் மாநில விவசாய அணி தலைவர் ஜி. கே. நாகராஜ் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
நிகழ்வில் நமது மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சி. சரஸ்வதி , ஈரோடு தெற்கு மாவட்ட தலைவர் வி.சி.வேதானந்தம், மாவட்ட விவசாய அணி தலைவர் பன்னீர்செல்வம் ஆகியோர் முன்னிலை வகிக்க, பாரதிய ஜனதா கட்சியின் தேசிய, மாநில, மாவட்ட, மண்டல் நிர்வாகிகள் மற்றும் விவசாய அணி நிர்வாகிகள் பெருந்திரளாக கலந்து கொண்டு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.