• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

நவகாளி அம்மனுக்கு 71 அடி உயரத்தில் சிலை!

தமிழகத்தில் முதன் முறையாக நவகாளி அம்மன் சாமிக்கு 71 அடி உயரத்தில் சிலை அமைக்கப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டி அருகே காராப்பாடி-அணையப்பாளையம் சாலையில் நவகாளியம்மன் கோவில் அமைந்துள்ளது. அங்கு நவ காளியம்மன் 71 அடியில் சொரூபமாக விற்றிருக்கிறார்.
கோவில் வளாகத்தில் விநாயகர் சிலை உள்ளது. அதற்கு அடுத்து நவ காளியம்மன், கருப்பராயனுக்கு சன்னதி உள்ளது. இக்கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்து பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
புதிதாக கோபுரம் கட்டப்பட்டு, தனி சன்னதியில் விநாயகர், முருகர், கருப்பராயன், கன்னிமார்கள், சிலைகள் நிறுவப்பட்டுள்ளன. தமிழகத்தில் முதன்முறையாக, 71 அடி உயரத்துக்கு நவகாளி அம்மனுக்கு சிலை அமைக்கப்பட்டுள்ளது. சித்திரை மாதம் 10-ம் தேதி கும்பாபிஷேக விழா நடைபெறு உள்ள நிலையில் திருப்பணி மும்முரமாக நடந்து வருகிறது.
இதுகுறித்து கோவில் நிர்வாகத்தினர் கூறுகையில், ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டி அருகே தமிழகத்தில் வேறு எங்கும் இல்லாத வகையில் நவகாளி அம்மனுக்கு 71 அடி உயரத்தில் சிலை! 10 கைகளுடன் பிரம்மாண்ட தோற்றத்துடன் சிலை அமைக்கப்பட்டுள்ளது என்று கூறினர்.