திருப்பதி கோயிலில் உண்டியல் வசூல் கோடிகளில் வரும் என்பது தெரிந்ததே. ஆனால் ஒரே நாளில் அதிகமான உண்டியல் வசூலில் சாதனை படைத்துள்ளது திருப்பதி கோயில்.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இதுவரை இல்லாத வகையில் ஒரேநாளில் அதிக தொகை உண்டியலில் காணிக்கையாக கிடைத்துள்ளது. கடந்த 4ம் தேதி மட்டும் ரூ.6.14 கோடி திருப்பதி கோயிலில் உண்டியல்களில் காணிக்கையாக விழுந்துள்ளது. இது வரலாற்று சாதனையாக பார்க்கப்படுகிறது.அத்துடன் கடந்த ஒருமாதத்தில் மட்டும் திருப்பதி உண்டியல்களில் ரூ138.45 கோடி காணிக்கை வசூலாகியுள்ளது.