திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் பன்னிரு திருமுறை திருவிழா சிறப்பாக நடைபெற்றது.இதில் கடைசி நாளான இன்று ஓதுவார் நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.
அண்ணாமலையார் ஆலயத்தில் அகிலம் போற்றும் பன்னிரு திருமுறை திருவிழா நிறைவு நாள் இன்று. கடந்த ஜூலை 28 ஆம் தேதி வியாழன் அன்று தொடங்கி ஆறு தினங்களுக்கு பன்னிரு திருமுறை திருவிழா நடைபெற்று வருகிறது. இன்றைய தினம் நிறைவு நாள் நிகழ்வுகள் நடைபெற்றது . இந்த நிகழ்ச்சியில் சிதம்பரம் வெங்கடேச தீக்ஷிதர் தில்லை நடராஜரின் அருள் பிரசாதத்தை பிரபல இசையமைப்பாளர் இளையராஜா அவரின் மகனும் இசையமொப்பாளருமான கார்த்திக் ராஜாவுக்கு வழங்கி, நினைவு பரிசையும் கொடுத்து வாழ்த்தினார்கள். இந்த நிகழ்ச்சியில் ஓதுவார்கள் இசையுடன் திருமுறைகளை இசைத்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.