• Wed. May 6th, 2026
WhatsAppImage2026-05-05at001329
previous arrow
next arrow
Read Now

மழை வெள்ளம் பாதித்த மக்களுக்கு 5000 ரூபாய் நிவாரணம்

Byகாயத்ரி

Dec 11, 2021

வடகிழக்கு பருவ மழையின் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த மாதம் நல்ல மழை பெய்தது. இதனால், நீர் நிலைகள் நிரம்பி வழிந்தது. அதுமட்டுமின்றி எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாக காட்சியளித்தது. மழை வெள்ளத்தால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி கூறியதாவது: “புதுச்சேரியில் கனமழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அடுத்தவாரம் முதல் 5000 ரூபாய் நிவாரணம் வழங்கப்படும்.

மத்திய அரசு, புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்கும் என்ற நம்பிக்கை உள்ளது. புதுச்சேரி மக்களுக்கான திட்டங்கள், வாக்குறுதிகள் அனைத்தும் 5 ஆண்டுகளில் நிறைவேற்றப்படும்” என்று தெரிவித்துள்ளார்.


சிவப்பு குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் மஞ்சள் குடும்ப அட்டைதாரர்களுக்கு 5 ஆயிரம் நிவாரணம் வழங்கப்படும் என கடந்த மாதம் அறிவித்திருந்தார். இந்நிலையில், அடுத்த வாரம் நிவாரணம் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.