• Tue. May 30th, 2023

பாம்பை லாவகமாக பிடிக்கும் 4 வயது சிறுமி

ByA.Tamilselvan

Jun 3, 2022

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே ஆலோரை கிராமத்தில் 4 வயது சிறுமி ஸ்ரீ நிஷா பாம்பை லாவகமாக பிடித்து புற்றுக்குள் விடும் காட்சி இணையதளத்தில் வைரலாகி வருகிறது
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உபதலை பகுதியில் உள்ளது ஆலோரைகிராமம். இப் பகுதியில் 6 அடி நீளம் கொண்ட பாம்பு குடியிருப்புகளுக்குள் செல்ல முற்பட்டது.இதனைக் கண்டு வாசலில் விளையாடிக் கொண்டிருந்த 4 வயது சிறுமி ஸ்ரீ நிஷா அங்கு சுற்றித்திரிந்த பாம்பை பிடித்து அருகில் இருந்த பாம்பு புற்றுக்குள் அச்சமின்றி விடுவதை அங்குள்ளவர்கள் கண்டு ஆச்சரியமடைந்தனர்.
மேலும் அங்கிருந்தவர்கள் இக்காட்சியை தங்களது செல்போனில் படம் பிடித்து இணையத்தில் வெளியிட்டுள்ளனர் . இந்த காணொலி அனைவரையும் ஆச்சரியம் அடைய செய்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *