ஜெயலலிதா மரணம் குறித்த அறிக்கையை வழங்குவது என் பணி அதனை செய்துவிட்டேன். ஏற்பதும் வெளியிடுவதும் அரசின் முடிவு நீதியரசர் ஆறுமுகசாமி பேட்டி
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரண அறிக்கை தமிழக முதல்வரிடம் ஒப்படைத்தது ஆறுமுகசாமி ஆணையம் .ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்திய ஆறுமுகசாமி ஆணையம் 5 வருட கால விசாரணைக்கு பிறகு
தனது இறுதி அறிக்கையை தமிழக முதல்வரிடம் தாக்கல் செய்தது.மேலும் 14 முறை அவகாசம் நீட்டிக்கப்பட்டதற்கு பிறகு இந்த அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.இந்த அறிக்கையில் பல திடுக்கிடும் தகவல்கள் இடம்பெற்றுள்ளதால் பலர் சிக்குவதற்கு அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் முதல்வர் ஸ்டாலினிடம் அறிக்கை தாக்கல் செய்ய பின்னர் செய்தியளர்களிடம் நீதியரசர் ஆறுமுகசாமி தாக்கல் செய்தார். அறிக்கை தாக்கல் செய்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஜெயலலிதா மரண வழக்கின் விசாரணையை தான் தாமதப்படுத்தவில்லை என்றார். ஆணையத்தின் சந்தேகங்கள் அனைத்தும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது என்று கூறினார்.
எனது தனிப்பட்ட கருத்தை நான் அறிக்கையில் பதிவு செய்யவில்லை. சசிகலா தரப்பினர் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்தனர்.சசிகலா நேரில் வராத காரணத்தால் எழுத்து பூர்வமாக பதில் பெறப்பட்டது. விசாரணைக்கு ஒத்துழைப்பு கொடுத்த அனைவருக்கும் நன்றி.
ஜெயலலிதா மரணமடைந்து மூன்று மாதங்களுக்குப் பிறகுதான் எய்ம்ஸ் மருத்துவ குழுவினர் அறிக்கை தாக்கல் செய்தனர். போயஸ் கார்டனில் இருந்து ஜெயலலிதா மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டதில் எந்த வித சந்தேகமும் இல்லை என்றும் நீதியரசர் ஆறுமுகசாமி கூறியுள்ளார்.மேலும் ஜெயலலிதா மரணம் குறித்த அறிக்கையை வழங்குவது என் பணி அதனை செய்துவிட்டேன். ஏற்பதும் வெளியிடுவதும் அரசின் முடிவு என்றார் அவர்