


சட்டமேதை டாக்டர் அம்பேத்கரின் 134 ஆவது பிறந்தநாள் திருநள்ளாறு தொகுதியில் புதுச்சேரி மாநில பாஜக துணை தலைவர் ஜி.என்.எஸ் ராஜசேகரன் தலைமையில் கொண்டாடப்பட்டது.
சட்ட மேதை டாக்டர் அம்பேத்கர் 134 வது பிறந்த தினம் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதனை ஒட்டி காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறு தொகுதிக்கு உட்பட்ட அம்பகரத்தூர் சேத்தூர் திருநள்ளாறு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அமைக்கப்பட்டிருந்த அண்ணல் அம்பேத்கரின் திருவுருவப்படத்திற்கு புதுச்சேரி மாநில பாஜக துணைத் தலைவர் ஜி.என்.எஸ் ராஜசேகரன் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இந்நிகழ்ச்சியில் பட்டியலணி மாநில செயலாளர் கார்த்தி, தொகுதி தலைவர் பாலமுருகன், பொதுச் செயலாளர் ஜெயசிம்மன் உள்ளிட்ட ஏராளமான பாஜகவினர் கலந்து கொண்டனர். திருநள்ளாறு தேரடியில் வெயிலின் தாக்கத்தை குறைக்கும் வகையில் மோர் பந்தல் அமைக்கப்பட்டு தண்ணீர், மோர், இளநீர், தர்பூசணி உள்ளிட்டவை ஏழை எளிய மக்களுக்கு வழங்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து திருநள்ளாறு பகுதியில் ஜி.என்.எஸ் டாட்டா ஏசி கார் வேன் ஓட்டுனர்கள் மற்றும் உரிமையாளர்கள் சங்கத்தின் பெயர் பலகையை ஜி.என்.எஸ்.ராஜசேகரன் திறந்து வைத்தார்.

