• Thu. Oct 8th, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

ஸ்ரீ சனீஸ்வர பகவான் ஆலயத்தில் வைகாசி பிரம்மோற்சவ விழா..,

ByM.I.MOHAMMED FAROOK

May 21, 2026

காரைக்கால் அடுத்த திருநள்ளாறில் உள்ள உலக பிரசித்தி பெற்ற ஸ்ரீ தர்ப்பாரண்யேஸ்வர சுவாமி தேவஸ்தானம் ஸ்ரீ சனீஸ்வர பகவான் ஆலயத்தில் வைகாசி பிரம்மோற்சவ விழா கடந்த 13ம் தேதி கொடியேற்றத்துடன் விமரிசையாக துவங்கியது.

இந்த நிலையில் பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான அடியார்கள் நால்வர் புஷ்ப பல்லக்கு வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் புஷ்ப பல்லக்கு உற்சவத்தில் திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர், மாணிக்கவாசகர் மற்றும் சுந்தரமூர்த்தி ஆகிய அடியார்கள் நால்வரும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட புஷ்ப பல்லக்கில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளான 27ம் தேதி திருத்தேரோட்டம், 28ம் தேதி சனிபகவான் தங்க காக்கை வாகனத்தில் வீதியுலா மற்றும் தெப்போற்சவம் 29ம் தேதியன்றும் நடைபெற உள்ளது.