



டாக்டர் அம்பேத்கரின் 134 வது பிறந்தநாளை ஒட்டி, காரைக்காலில் பாஜக சார்பில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
சட்டமேதை டாக்டர் அம்பேத்கரின் 134-வது பிறந்தநாளை ஒட்டி காரைக்கால் மாவட்ட பாஜக சார்பில் காரைக்கால் புதிய பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்டிருந்த அம்பேத்கரின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து காரைக்கால் அரசு மாணவர் விடுதியில் அமைந்துள்ள அம்பேத்கரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து காரைக்காலில் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்று காரைக்கால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே உள்ள அம்பேத்கரின் முழு உருவ சிலைக்கு புதுச்சேரி மாநில பாஜக துணைத் தலைவர் ஜி.என்.எஸ்.ராஜசேகரன் மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். இந்நிகழ்ச்சியில் மாநில துணை தலைவர் கணபதி, மாவட்ட பொறுப்பாளர் மீனாட்சி சுந்தரம், மாவட்ட தலைவர் முருகதாஸ், பட்டியல் அணி தலைவி மணியம்மை உள்ளிட்ட ஏராளமானார் பாஜகவில் கலந்து கொண்டனர்.


