• Thu. Jul 9th, 2026
WhatsAppImage2026-07-03at000327
previous arrow
next arrow
Read Now

கொத்தளம் தெரு புனித சூசையப்பர் ஆலய ஆண்டு திருவிழா தேர் பவனி..,

ByM.I.MOHAMMED FAROOK

May 20, 2026

காரைக்கால் மாவட்டத்தின் மையப் பகுதியான கொத்தளம் தெருவில் அமைந்துள்ள பழமை வாய்ந்த புனித சூசையப்பர் ஆலய ஆண்டு திருவிழா மூன்று நாட்கள் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு கொத்தளம் தெரு புனித சூசையப்பர் ஆலய ஆண்டு திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான அலங்கார தேர் பவனி இன்று நடைபெற்றது. தேர் பவனியையொட்டி சூசையப்பர் சுருவம் சுமந்த மலர் மற்றும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தேரினை பங்குத்தந்தை பால்ராஜ் குமார், இணைபங்கு தந்தை சாவாமிநாதன் செல்வம், துணை பங்கு தந்தை செல்வநாயகம் ஆகியோர் மந்திரத்து சிறப்பு திருப்பலி நடத்தினார்.

தொடர்ந்து காரைக்காலின் முக்கிய வீதிகள் வழியாக திருத்தேர் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. இந்நிகழ்ச்சியில் அருட் கன்னியர்கள், பாஜக புதுச்சேரி மற்றும் கேரள சிறுபான்மை அணி தேசிய செயற்குழு உறுப்பினர் விக்டர் ராயப்பசாமி, கிராம நிர்வாகிகள் மற்றும் கிராம வாசிகள் உள்ளிட்ட ஏராளமான பங்கு மக்கள் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்தனர். நாளை கொடி இறக்கத்துடன் ஆண்டு திருவிழா நிறைவடைகிறது.