

திருப்பரங்குன்றம் அருகே வலையங்குளம் அரசு பள்ளி ஆண்டு விழாவில் கிராமப்புற மாணவர்களின் தனித்திறமைகளை வளர்க்கும் விதமாக பள்ளியின் 110-வது ஆண்டு விழா நடைபெற்றது. மாற்றுதிறனாளி மாணவர் குழுவில் நடனம், மாணவர் திறன் வளர்ப்பு முன்னோட்டம் நிகழ்ச்சி, செல்போன் விழிப்புணர்வு நாடகம், நாட்டியம் என மாணவர்கள் அசத்தினர்.
மதுரை திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வலையங்குளம் பகுதியிலுள்ள அரசு ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளியின் 110 வது ஆண்டு நிறைவு விழா நடைபெற்றது.


இதில் பள்ளியில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஆசிரியர்களை கெளரவ படுத்தும் விதமாக பேண்ட் வாத்தியம் முழங்த வரவேற்பு அளிக்கப்பட்டு முன்னாள் மாணவர்களால் நினைவு பரிசுகள் வழங்கு கெளரவித்தனர்.
அனைத்து அரசு பள்ளிகளிலும் ஆண்டு விழா நடத்தி மாணவர்களின் திறனை வெளிக்கொண்டு வரவேண்டும் என முன்னரே பள்ளிக்கல்வித்துறை யால் அறிவிக்கப் பட்டிருந்தது.
இவ் விழாவானது பள்ளியின் தலைமை ஆசிரியர் உஷா பானு அவர்கள் தலைமையில் நடைபெற்றது.


மேலும் பள்ளியில் படித்த முன்னால் மாணவர்களும் பள்ளியின் முன்னால் ஆசிரியர்களும் கலந்து கொண்டு இவ்விழாவை சிறப்பித்தனர். அவர்களை பாராட்டும் விதமாக நினைவு பரிவுகள் வழங்கி சால்வை அணிவிக்கப்பட்டு சிறப்பிக்கப்பட்டனர்.
பள்ளியின் மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. இவ்விழாவில் மாணவர்கள் செல்போனுடன் நேரத்தை வீணாக்காமல், எவ்வாறு நேரத்தை நல்லவிதமாக, பயன்படுத்தலாம் என்றும் மாணவர் திறன் வளர்ப்பு நிகழ்வாக முன்னாள் செஸ் உலக சாம்பியன் விஸ்வ நாதன் ஆனந்த் அவர்களின் வாழ்கை முறையை நாடாகமாக மணவர்கள் நடித்து காட்டி தங்களை வளர்த்து கொள்ள விழிப்புணர்வு நாடகம் அனைவரையும் கவர்ந்தது.

