அரியலூர் புவியியல் மற்றும் சுரங்கத்துறை தனி வருவாய் அலுவலர் பாண்டியன் தலைமையிலான குழுவினர் மணல் கடத்தலை தடுக்கும் வகையில் ஜெயங்கொண்டம் மற்றும் விருதாச்சலம் சாலையில் உள்ள கீழக்குடியிருப்பு அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்ட போது அப்போது கிராவல் மண் ஏற்றி வந்த லாரியை மடக்கிப்பிடித்தனர். லாரி ஓட்டுனர் மாங்கொட்டை தெருவைச் சேர்ந்த வேல்முருகன் (37)ஐ கைது செய்து ஜெயங்கொண்டம் போலீசாரிடம் ஒப்படைத்தனர். லாரியை பறிமுதல் செய்தனர்.