• Mon. Apr 27th, 2026
WhatsAppImage2026-04-23at013527
previous arrow
next arrow
Read Now

திருமங்கலம் அருகே நள்ளிரவில் வாலிபர் ஓட ஓட வெட்டிக்கொலை..!

ByKalamegam Viswanathan

Apr 27, 2026

மதுரை மாவட்டம் திருமங்கலம் அடுத்த கள்ளிக்குடி தாலுகா சோளம்பட்டி கூட்டுறவு பண்டக சாலை அருகே வசித்து வரும் ராமசாமி என்பவரது மகன் சீனிவாசன் 29 திமுக பிரமுகரான இவர் நேற்று இரவு 12 மணி அளவில் வீட்டிலிருந்து இருசக்கர வாகனத்தில் கள்ளிக்குடியில் டீ கடைக்குச் சென்றுள்ளார்.

அப்போது வீட்டின் அருகே மறைந்திருந்த மர்ம கும்ப கும்பல் சீனிவாசனை பின் தொடர்ந்து வந்து வெட்ட முற்பட்டுள்ளது இதை அறிந்த சீனிவாசன் இருசக்கர வாகனத்தை கீழே போட்டு விட்டு தன்னைக் காப்பாற்றுமாறு கூச்சலிட்டுக் கொண்டே ஊருக்குள் ஓடி உள்ளார்.நள்ளிரவு நேரம் என்பதால் யாருக்கும் சீனிவாசன் குரல் கேட்கவில்லை. இந்த நிலையில் தப்பி ஓடிய சீனிவாசனை துரத்திக் கொண்டு வந்த கும்பல் அங்கன்வாடி மையம் அருகே சீனிவாசனை சுற்றி வளைத்து அரிவாள் கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடியுள்ளது. இந்நிலையில் இரவு நேரத்தில் அவ்வழியாக வந்தவர்கள் சீனிவாசன் கொலை செய்யப்பட்டு கிடப்பதை அறிந்து கள்ளிக்குடி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து வந்த கன்னிக்குடி போலீசார் இறந்த சீனிவாசன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து சம்பவம் குறித்து விசாரித்த போது சோளம் பட்டியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற திருவிழாவின் போது அதே ஊரைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தனது நண்பர்களுடன் கரகம் கரைக்கும் இடத்தில் அமர்ந்து மது அருந்தியதாகவும் அதை கிராம மக்களோடு சேர்ந்து சீனிவாசன் கண்டித்து அவர்களை தாக்கியதாகவும் சொல்லப்படுகிறது. இதனால் ஏற்பட்ட முன் விரோதத்தால்தகராறு ஈடுபட்டவர்களால் சீனிவாசன் வெட்டி கொலை செய்யப்பட்டாரா?அல்லது வேறு ஏதும் காரணமா ? என்ற கோணத்தில்சந்தேகத்தின் அடிப்படையில் ஒருவரை பிடித்து போலீசார் விசாரித்து வருவதாக காவல்துறை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இறந்த சீனிவாசன் மதுரை மேற்கு தொகுதியில் திமுக வேட்பாளராக போட்டியிட்ட ரகு பாலாஜிக்கு ஆதரவாக தீவிரமாக பிரச்சாரம் செய்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. வீட்டை விட்டு வெளியே வந்த நபரை நள்ளிரவில் நான்கு பேர் கொண்ட கும்பல் வெட்டி கொலை செய்த சம்பவம் சோளம் பட்டி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.