• Fri. Sep 18th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

திண்டுக்கல்லில் புளி வியாபாரிடம் ரூ.1.30 லட்சம் திருட்டு..,

ByS.Ariyanayagam

Apr 26, 2026

திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் புளி வியாபாரியிடம் ரூ.1,30,000 திருடப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டியை அடுத்த வேம்பார்பட்டியை சேர்ந்த மாரிமுத்து மகன் பாலமுருகன்(40) புளி வியாபாரியான இவர் திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் காரைக்குடி செல்லும் பேருந்தில் ஏறும்போது கூட்ட நெரிசலை பயன்படுத்தி மர்ம நபர் டவுசர் பாக்கெட்டை பிளேடால் அறுத்து டவுசர் பாக்கெட்டில் வைத்திருந்த ரூ.1,30,000 பணத்தை திருடி சென்றனர்.

இதுகுறித்து பாலமுருகன் திண்டுக்கல் நகர் வடக்கு காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் நகர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் வெங்கடாசலபதி சார்பு ஆய்வாளர் பிரபாகரன் மற்றும் காவலர்கள் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.